• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த மாதம் எப்படி இருக்கு? ஆவணி மாத ராசிபலன்கள் (தனுசு - மீனம் வரை)!

    பிறந்துள்ள ஆவணி மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    அந்த வகையில், தனுசு - மீனம் வரையான நான்கு ராசியினருக்கும் ஆவணி மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். நீண்ட நாட்களாக காத்திருந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் இனிமையான சூழ்நிலை நடைபெறும். சமூகத்தில் அந்தஸ்து கௌரவமும் உயரும். ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை மேலோங்கும். அதேசமயம் தேவை இல்லாமல் பேசுவதால் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இதுவரை இருந்து வந்த போட்டிகள் அனைத்தையும் சமாளித்து வெற்றி அடைவீர்கள்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவது சற்று சிரமமாகவே இருக்கும். ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் சுயமாக யோசித்து எடுக்க வேண்டுமே தவிர்த்து பிறரின் பேச்சைக் கேட்டு எடுக்காமல் இருப்பது நன்மையை தரும். குடும்பத்தில் மூத்தோர்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுப்பது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். பொறுமையுடனும் நிதானத்துடனும் அந்த வேலையை கவனமாக செய்து முடிப்பதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டால் பிரச்சனைகள் உண்டாக்கும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று நினைத்து வந்தவரை லாபத்தை அனுபவித்துக் கொள்ள வேண்டும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு கால பைரவரை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும் என்றாலும் வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தடைகள் உண்டாகும். திருமணம் முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரியும் சூழ்நிலை கூட உண்டாகும். அதனால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். புதிதாக வீடு வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல் நிதானத்துடன் எடுப்பது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை சாதகமற்ற சூழ்நிலையே நிலவுகிறது. எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பது சிரமமாகவே இருக்கும். அதேசமயம் வீண் பழிக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று கடினமாக இருக்கும். தொழில் ரீதியாக இருக்கக்கூடிய போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் வீண் செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சிறு உபாதையாக இருந்தாலும் அதற்குரிய மருத்துவரை பார்த்து சரி செய்து கொள்வது நல்லது. இல்லங்களில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த போட்டிகள் அனைத்தையும் சமாளித்து வெற்றி காணும் அளவிற்கு லாபம் உண்டாகும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வாராகி அம்மனை வழிபட வேண்டும்.

    Leave A Comment