இந்த வாரம் எப்படி? ஆகஸ்ட் 12 - 18 வரை; 12 ராசிகளுக்கான பலன்கள்!
12/08/2024 முதல் 18/08/2024 வரையான இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்கான ராசிபலன்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்ற மிகுந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதே சமயம் தேவையற்ற வீண் செலவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த உறவுகள் விரும்பி வந்து சேர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி வரும்.
வேலையைப் பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதில் கூடுதல் கவனம் செலுத்தி அந்த வேலையை செய்ய வேண்டும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் தற்சமயம் இல்லை. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. நஷ்டம் ஏற்படாமல் தடுப்பதற்கு அதிக அளவில் முயற்சிகளையும் அதற்குரிய உழைப்பையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது கவனமாக இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு சுப விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அந்த வேலையை திறம்பட செய்வதன் மூலம் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். தொழிலை விரிவு படுத்தவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ அவசரப்படக்கூடாது. பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக தீர்வு கொள்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையாக செலவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடன் பிறந்தவர்களால் மனவருத்தம் ஏற்படும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. திருமணத்திற்காக முயற்சி செய்பவர்கள் அவசரப்படாமல் நிதானத்துடன் செய்ய வேண்டும். புதிதாக எந்த முயற்சிகளிலும் இந்த வாரம் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைக்கும் வாரமாக இந்த வாரம் திகழும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சற்று பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும் என்றாலும் புதிய முதலீடுகள் எதையும் செய்யாமல் இருக்க வேண்டும். கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ இந்த வாரம் தவிர்ப்பது நல்லது.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஸ்ரீரங்கநாதரை வழிபட வேண்டும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிப்பதற்குரிய வரவுகள் உண்டாகும். வீண் செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. வீண் மனவருத்தம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். பிறரிடம் பேசும் பொழுது பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பம் தொடர்பான முடிவுகளை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுக்க வேண்டும்.
வேலையை பொருத்தவரை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைக்கும் நேரம் வந்துவிட்டது. ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றகரமான நிலை உண்டாகும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆதரவான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு பணவரவு ஏற்படும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. திருமணத்திற்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும். அதனால் நிம்மதியுடன் இருப்பீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக திகழ்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு இந்த வாரத்தில் முயற்சி செய்யலாம்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கட்டுப்பாட்டுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு உண்டாகும். ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தவறாக புரிந்து கொண்டவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். பிறரிடம் பேசும் பொழுதும் பழகும் பொழுதும் கவனத்துடனும் கட்டுப்பாட்டுடனும் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். எந்த சலுகைகளையும் இந்த வாரத்தில் எதிர்பார்க்க முடியாது இருப்பினும் வேலையில் கவனம் செலுத்தி செய்வதோடு மட்டுமல்லாமல் உடன் பணிபுரிபவர்களுடன் எச்சரிக்கையாக பழகுவது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. சற்று மந்தமாகவே இருக்கும். இந்த வாரத்தில் பிறருக்கு கடன் கொடுப்பதையும் பிறரிடம் இருந்து கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு கோமதி அம்மனை வழிபட வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வீண் விரயங்கள் எதுவும் ஏற்படாது. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி கிடைக்கும். பயணங்களால் அலைச்சலும் சோர்வும் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. சற்று பொறுமையுடனும் விடாமுயற்சியுடன் தொழிலை மேற்கொள்ளும் பொழுது பிற்காலத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகத்துடன் செயலாற்றும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை ஏற்படும். உறவினர்கள் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகளும் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் அனுகூலம் ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதனால் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள் உதவி செய்வார்கள். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாது. இதனால் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் புதிதாக எந்த முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடினமாக உழைக்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் மருத்துவ செலவு உண்டாகும் சூழ்நிலை இருக்கிறது. குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை தென்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. வேலையை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்று எதிர்பார்த்த சலுகைகளையும் பெறுவீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். யாருக்கும் பணத்தை கைமாற்றாக தருவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆதரவு கிடைக்கும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வசூல் ஆகாத கடன்கள் திரும்பி வருவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது.
வேலையை பொருத்தவரை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். மேலும் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்குரிய முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்ளலாம்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை தென்படும். உடல் ஆரோக்கியத்தின் மேம்படும். சுப காரியங்கள் தொடர்பான விஷயங்களில் இந்த வாரம் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். இதனால் ஒரு சிலருக்கு உடல் ரீதியாக சோர்வு ஏற்படும். உடன் பணிபுரிபவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுப்படுத்தும் எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த வாரத்தில் முயற்சி செய்யலாம். வெற்றிகள் கிடைக்கும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிரமங்களை சந்திக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வழக்குகள் சாதகமாக முடியும். ஒரு சிலருக்கு பயணங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தின் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை வேலை சூழ்நிலை சாதகமாக உள்ளது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. அதே சமயம் நஷ்டமும் ஏற்படாது. இருப்பினும் தொழிலை விரிவு படுத்துவதற்காக யாரிடமிருந்தும் பணத்தை வாங்காமல் இருப்பது நல்லது.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஸ்ரீனிவாச பெருமாளை வழிபட வேண்டும்.
Leave A Comment