இந்த வாரம் எப்படி? ஆகஸ்ட் 05 - 11 வரை; 12 ராசிகளுக்கான பலன்கள்!
05/08/2024 முதல் 11/08/2024 வரையான இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்கான ராசிபலன்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வாய்ப்புகள் தேடி வரும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. திருமண பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் அமையும். வாகனங்கள் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்தி கடின உழைப்பையும் செலுத்தினால் அதற்குரிய வெற்றிகள் உங்களைத் தேடி வரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதன் மூலம் ஏற்படும் லாபத்தால் மன மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே மூன்றாவது நபரால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதும் பிறரின் பேச்சை கேட்காமல் இருப்பதும் நல்லது. பழைய கடன்களை தீர்ப்பதற்கு முயற்சி செய்வீர்கள்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சினைகள் தீரும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்து இருந்த செய்திகள் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்படலாம். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். புதிதாக வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சூழ்நிலை சாதகமாகவே இருக்கும். புதிதாக வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவைவிட அதிக அளவு லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் இந்த மாதத்தில் தொடங்கினால் பணவரவு என்பது அதிகரிக்கும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகிழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தைரியத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது சற்று விட்டுக் கொடுத்த அனுசரித்து செல்வது நல்லது. பிரிந்த கணவன் மனைவிகள் ஒன்று சேர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். இருப்பினும் உடன் பணிபுரிபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரம் திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். ஒரு சிலருக்கு உடன் பிறந்தவர்களால் மனவருத்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஆலோசித்து எடுப்பது மிகவும் முக்கியம். மனதில் தேவையில்லாத குழப்பங்கள் தோன்றி அழைப்பாய வைக்கும் கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடித்து அதற்குரிய சலுகைகளை பெறுவீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட லாபம் அதிகமாக கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் நல்ல ஆலோசனை தந்து தொழிலை மேம்படுத்துவார்கள்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அவசரப்படாமல் நிதானமாக செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஒரு சிலருக்கு எதிர்பாராத திடீர் பணவரவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை சாதகமற்ற சூழ்நிலையே நிலவுகிறது. கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைக்காது. இருப்பினும் சிறிய தவறை கூட செய்யாமல் கவனமாக பணியாற்ற வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு தேவையான கடன் உதவிகள் கிடைக்கும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மங்களகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் மனதை போட்டு வருத்திக் கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் தேவை அறிந்து உதவி செய்வார்கள்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. கடுமையான போட்டியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிதாக எந்த தொழிலிலும் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு கூடுதல் பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. முடிந்தவரை புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். இருப்பினும் சற்று எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று கடினமாகவே இருக்கும். இருப்பினும் நஷ்டம் ஏற்படாது. உடன் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகிழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பண வரவும் உண்டாகும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரப்படாமல் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை எதிர்பார்த்த அளவு சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்த நினைப்பவர்கள் இந்த வாரத்தில் முயற்சி செய்யலாம். வெற்றிகள் கிடைக்கும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு வரவு உண்டாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் செய்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். சிறிய பிரச்சினையாக இருந்தாலும் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதை அலட்சியப்படுத்தாமல் உடனே சரி செய்து கொள்வது நல்லது. பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இல்லையேல் அதனால் பிரச்சனைகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். உங்கள் திறமையை நிரூபிக்கும் சூழ்நிலை உண்டாகும். இதனால் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் ஓரளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை புதிய இடத்திற்கு மாற்ற நினைப்பவர்கள் இந்த வாரத்தில் ஈடுபடலாம்.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும் என்றாலும் திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடல் நலத்தில் கவனம் தேவை. உடல் ரீதியாக சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
வேலையை பொருத்தவரை எவ்வளவு உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைக்காது. உடன் பணிபுரிபவர்களிடம் இருந்து பிரச்சனைகள் ஏற்படும். பொறுமையுடனும் கவனத்துடனும் செயலாற்ற வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் புதிதாக எந்த முயற்சிகளையும் எடுக்க வேண்டாம். முக்கிய முடிவுகள் எதையும் இந்த வாரம் எடுக்காமல் இருப்பது நல்லது.
இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
Leave A Comment