இன்றைய நாள் எப்படி? 07 ஆகஸ்ட் 2024!
புதன்கிழமை
07 – 08 - 2024
குரோதி ஆண்டு – ஆடி – 22 ஆம் தேதி
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். வாழ்க்கையில் பாதுகாப்பான உணர்வை பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சேமிப்பு கரையும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். சொகுசாக இருக்க முடியாது. எல்லா விஷயத்திலும் கஷ்டப்பட்டு சாதிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வீட்டில் இருக்கும் பெண்கள் முன்கோபத்தை குறைக்க வேண்டும். பெரியவர்களை எதிர்த்து பேசக்கூடாது. கணவனோடு வாக்குவாதம் செய்யக்கூடாது ஜாக்கிரதை. முடிந்தால் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தெளிவான நாளாக இருக்கும். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் மனது குழம்பாது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனதிருப்தி இருக்கும். வேலையில் ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். பணத்தடை விளக்கும். வருமானம் சீராக இருக்கும். சேமிப்பு உயரும். மனதை சஞ்சல படுத்த கூடிய கஷ்டங்கள் படிப்படியாக குறையும். பிள்ளைகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பொழுதுபோக்கு நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் கோவிலுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கும். மனது திருப்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் கூடுதல் முயற்சி இருந்தால் தான் வெற்றி காண முடியும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இன்று அயராது உழைக்க வேண்டும். கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருந்தாலும் தேவையற்ற பிரச்சனைகள் வரும். கலைஞர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். செலவை குறைக்கவும். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்கக் கூடாது.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கான வேலையில் நீங்கள் தான் சிறந்தவர்களாக இருப்பீர்கள். தொழிலில் இருந்து வந்த மந்தமான போக்கு விலகும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். நீண்ட தூரம் பயணம் கொஞ்சம் அலைச்சலை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் காட்டவும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். கையில் எடுத்த வேலையை சரியாக முடிக்க முடியாது. இதனால் டென்ஷன் கூடும். தலைவலி வரும். கோபத்தை அதிகமாக வெளி காட்டுவீர்கள். புதிய எதிரிகள் கூட உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து முடிவு எடுக்கவும். அவசரப்படாதீங்க.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆதாயம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் சரி தொழிலிலும் சரி யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை புரிந்து கொள்வீர்கள். வீட்டில் சுப காரிய தடை விளக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. பிள்ளைகளால் மனம் நிம்மதி ஏற்படும். உடலுக்கு ஆரோக்கியம் இல்லாத பொருட்களை சாப்பிடாதீங்க. கூடுமானவரை வீட்டு சாப்பாட்டை சாப்பிடுவது நல்லது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மந்தமான சூழ்நிலை ஏற்படும். எல்லா வேலையும் பிறகு செய்து கொள்ளலாம் என்று கொஞ்சம் தள்ளி வைப்பீங்க. ஆனால் இந்த நாள் வெறுமனே போகும். ஆகவே உங்கள் நேரத்தை வெட்டியாக செலவழிக்கும்படி யார் வந்து பேசினாலும் ஏமாந்து விடக்கூடாது. கேளிக்கையில் ஆர்வம் காட்டக்கூடாது. ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு நொடியையும் சரியாக பயன்படுத்தினால் மட்டுமே இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த முடிவை எப்படி எடுப்பது என்று தெரியாமல் திணறுவீர்கள். புதிய முடிவை எடுக்க வேண்டாம். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. இந்த நாள் முழுவதும் கூடுதல் கவனத்தோடு செயல்படவும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கொஞ்சம் வீண் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
Leave A Comment