• Login / Register
  • ராசி பலன்கள்

    இன்றைய நாள் எப்படி? 05 ஆகஸ்ட் 2024!

    திங்கள்கிழமை

    05 - 08 – 2024
    குரோதி ஆண்டு – ஆடி – 20 ஆம் தேதி

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்கள் இன்று முக்கியமான வேலைகளை அவசரப்பட்டு செய்யக்கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும். இன்றைய நாள் உங்களுக்கு பெரிய அளவில் சாதகமாக இருக்காது. அதனால் பிரச்சனைகள் வருந்துவிடுமோ என்ற பயமும் தேவையில்லை. முயற்சிகளில் சின்ன சின்ன தோல்விகள் வரும் அவ்வளவு தான். வேலையில் சொன்ன நேரத்தில் பணிகளை முடித்து தர முடியாத சூழ்நிலை இருக்கும். தலை குனிவு ஏற்படும். தளராமல் இருங்கள். எல்லாம் அடுத்த நாள் சரியாகிவிடும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையில் நல்ல முன்னேற்றமும், மனதிருப்தியும் இருக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விளக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் முன்னேற்ற ம் அடைவதற்கு தேவையான அத்தனை நன்மைகளும் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலிலும் பெருசாக பிரச்சனைகள் இருக்காது. லாபம் நிறைந்த நாளாக தான் அமையும். ஆனால் குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரலாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வரலாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். முன்கோபம் கொஞ்சம் அதிகமாக வரும். சொந்த பந்தங்களிடம் கவனமாக பேசவும். அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீர்கள். குழப்பத்திற்கு தீர்வு காண மனதை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தவும். வேலை செய்யும் இடத்தில் சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைக்கவும். அப்போது தான் கெட்ட பெயர் வருவதில் இருந்து தப்பிக்கலாம்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பொழுதுபோக்கு நிறைந்த நாளாக இருக்கும். எவ்வளவுதான் வேலை செய்தாலும் உங்களுக்கு அதில் சோர்வு ஏற்படாது. சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். காரணம் வேலையோடு சேர்த்து பொழுதுபோக்கையும் இன்று நீங்கள் அனுபவிக்க கூடிய யோகம் இருக்கப் போகிறது. தொழிலில் சின்ன சின்ன தடைகள் வரலாம். நீண்ட தூர பயணத்தையும் கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்தையும் சரியாக பிளான் செய்ய வேண்டும். ஆர்வம் இல்லாத வேலைகளை செய்ய வேண்டாம். வீண் வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருங்கள். மூன்றாவது நபரை நம்பி உங்கள் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள். தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். குலதெய்வத்தை நினைத்து காலையில் வழிபாடு செய்து விட்டு வெளியே செல்லவும்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வார தொடக்கமே வெற்றிகரமாக அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கட்டுமான தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். சேமிப்பு கரைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட தூர பயணம் நன்மையை தரும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்கள் இன்று பொறுமையை காக்க வேண்டும். முன்கோபத்தால் சின்ன சின்ன இழப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஆரோக்கிய குறைபாடுகள் வரும்படி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கஷ்டங்கள் விலகக் கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் மனதில் நினைத்த வேண்டுதல் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். எதிரிகளோடு சவால் விட்டு பேசக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சில பேருக்கு, இருக்கும் வேலையை விடும் அளவு கூட பிரச்சினைகள் வரலாம் ஜாக்கிரதை.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் இருக்கும். பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்த்து போராடுவீர்கள். கோழைத்தனத்தோடு நடந்து கொள்ள மாட்டீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கொஞ்சம் வீண்விரய செலவுகள் வர வாய்ப்புகள் இருக்கிறது.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். வாழ்க்கை துணையிடம் பொய் சொல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் உண்மையை பேசுவது நன்மையை தரும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியாக செல்ல வேண்டும் என்றால், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அனாவசியமாக பேசக்கூடாது. நாவடக்கம் தேவை. வேலையில் சின்ன சின்ன குழப்பங்கள் வரும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்குவீர்கள். கடமையை ஒழுங்காக செய்யுங்கள். பொய் சொல்லி தப்பிக்க பார்க்காதீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். செலவுக்கு ஏற்ப வருமானம் இருக்கும்.

    Leave A Comment