• Login / Register
  • ராசி பலன்கள்

    இன்றைய நாள் எப்படி? 03 செப்டெம்பர் 2024!

    செவ்வாய்கிழமை

    03 - 09 – 2024

    குரோதி ஆண்டு – ஆவணி - 18 ஆம் தேதி

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை மட்டும் தான் தேவை. எந்த விஷயத்திலும் நீங்கள் அவசரப்படவே கூடாது. முக்கியமான முடிவுகள் எடுப்பதாக இருந்தால் நாளை தள்ளிப் போடுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். எதிரியை குறைவாக எடை போடாதீர்கள். முழுசாக எந்த விஷயத்தையும் தெரிந்து கொள்ளாமல் யார் மீதும் பழி போட்டு பேச வேண்டாம். குறிப்பாக இது பெண்களுக்கு.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களைப் பார்த்து நாலு பேர், நாலு நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளும் அளவுக்கு உங்களுடைய வாழ்க்கை நெறிமுறைகள் இன்று அமையும். மனதில் நிம்மதி இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. வேலையில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். நீண்ட தூர பயணத்தை தவிர்த்து கொள்ளவும். முதலீட்டில் கவனமாக இருக்கவும். யாரை நம்பியும், யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

    கடகம்:

    கடக ராசி காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நினைத்து வைத்திருந்த நல்ல விஷயங்களை எல்லாம் இன்று செயல்படுத்துவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதே நடக்கும். கடவுளின் மீது பாரத்தை போட்டு செயல்படுங்கள்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்கள் இன்று வேகத்துடன் சேர்ந்து விவேகத்தோடு செயல்படுவீர்கள். எல்லா விஷயத்திலும் திறமை வெளிப்படும். உங்களை வெல்வதற்கு யாராலும் முடியாது. வேலையில் போட்டி, தொழிலில் போட்டி, எதிரிகளால் பிரச்சனை இப்படி பல தரப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். வெற்றிவாகை சூடுவீர்கள்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல காரியம் எல்லாம் கை கூடி வரும். வீட்டில் சுபகாரிய பேச்சுக்கள் தொடங்கும். நிலம் வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். புதுசாக சொத்து வாங்கக் கூடிய யோகமும் இருக்கிறது. வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற ஆசைப்பட்டு கொண்டிருந்தவர்களுடைய கனவு நிறைவேறும். வேலை தொழில் எல்லாம் சுமூகமாக செல்லும். இறையருள் உங்களுக்கு கிடைக்கும்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் வரும். நல்ல அனுபவ பாடங்களை கற்றுக் கொடுக்கும். வேலையில் சிறப்பாக செயல்பட முடியாது. இருந்தாலும் முயற்சிகளை கைவிடக்கூடாது. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. பெரிய பிரச்சனை வந்தாலும் சரி, சிக்கல்கள் வந்தாலும் சரி, பொறுமையை இழக்கக்கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ள சிந்தித்து செயல்படுவோம்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் வரும். எதிரி தொல்லை இருக்கும். முயற்சிகளில் தோல்வியும் இருக்கும். ஆனாலும் உங்களை சப்போர்ட் செய்வதற்கு நாலு நண்பர்கள், உறவினர்கள் கூடவே இருப்பார்கள். நீங்கள் என்ன ஆலோசனை கேட்டாலும், அவர்கள் உங்களை வழி நடத்துவார்கள். நல்ல ஆதரவை பெறக்கூடிய நாளாக இருக்கும். சுற்றி இருப்பவர்களின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்வீர்கள்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சிரமம் நிறைந்த, சோம்பல் நிறைந்த நாளாக இருக்கும். எந்த வேலையையும் முழுசாக செய்து முடிக்க முடியாது. அதற்குள் இன்னொரு அவசர வேலை வந்துவிடும். இப்படி ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை இன்று உண்டாகும். கவலைப்படாதீங்க, இன்று இரவு எல்லா பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு அசதி ஏற்படும். தூக்கம் தூக்கமாக வரும். வேலையில் கவனம் இருக்காது. இதனால் சில அசௌகரியங்கள் ஏற்படும். பெருசாக எந்த பாதிப்பும் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் வரக்கூடிய ஏற்ற இறக்கங்கள் தான் இது. ஆகவே இன்று நீங்கள் தேவையான வேலைகளை மட்டும் முடித்துக் கொள்ளுங்கள். ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் தவறு ஒன்றும் கிடையாது. பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைத்து விடுங்கள். யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். யாராவது வந்து உங்களை திட்டினாலும், உங்கள் வேலையை கெடுத்தாலும், அவர்களை உதாசீனப்படுத்த மாட்டீர்கள். பிரச்சனையை சொல்லி புரிய வைக்கும், அளவுக்கு பொறுமை உங்களிடத்தில் இருக்கும். இதனால் நிறைய நன்மைகளை பெறலாம். பொறுமை ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இன்று நீங்கள் உணருவீர்கள். உங்களுடைய முன்னேற்றத்தை சோசியல் மீடியா மூலமாகவோ, அல்லது பெருமைக்காகவோ அடுத்தவர்களிடம் பகிர வேண்டாம். கண் திருஷ்டி விழ வாய்ப்புகள் இருக்கிறது.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். மனைவியின் ஆதரவு கிடைக்கும். நிதிநிலைமை சீராகும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான அத்தனை முயற்சிகளும் வெற்றியை கொடுக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை செய்யும்.

    Leave A Comment