இந்த வாரம் எப்படி..? நவம்பர் 13 முதல் நவம்பர் 19 வரை 12 ராசிகளுக்குமான பலன்கள்!
13/11/2023 முதல் 19/11/2023 வரையான இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்குமான ராசிபலன்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய வாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பாராத பண வரவு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும் வீட்டு அலங்காரம் மற்றும் பழுதுபார்த்தல் போன்ற விஷயங்களுக்காக பணத்தை அதிகமாக செலவிட வேண்டியதாக இருக்கும். திடீர் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. உடல் நலனில் கவனம் தேவை. பருவ கால மாற்றத்தின் அடிப்படையில் உடல் நலனில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும் என்றாலும் மூன்றாவது நபரின் தலையிட்டால் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. முடிந்தவரை வீண் விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் பிரச்சினைகள் வருவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
வேலையை பொருத்தவரை வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வாரமாக தான் இந்த வாரம் இருக்கிறது. உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து சென்றால்தான் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும். எதிர்பார்த்த சலுகைகள் இந்த வாரத்தில் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை கடினமான உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும் வாரம். எதிர்பார்க்கும் லாபத்தை பெற வேண்டும் என்றால் அதற்காக கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பும் அனுசரணையும் கிடைக்கும் என்பதால் தொழில் வெற்றிகரமாகவே நடைபெறும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவிற்கு எந்தவித குறைவும் இருக்காது. எனினும் பணப்பரிவர்த்தனை செய்யும் பொழுது கவனமாக கையாள வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். குடும்பத்தில் சுப செய்திகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடல் நலனில் இதுவரை இருந்து வந்த ஆரோக்கிய சீர்கேடுகள் அனைத்தும் சரியாகும். கணவன் மனைவிக்குள் அன்பும் அன்யோனியமும் அதிகரிக்கும். உறவினர்களுடன் பேசும்பொழுது எச்சரிக்கையுடன் பேசுவதால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
வேலையை பொருத்தவரை உற்சாகமான வாரமாகவே இருக்கும். சமயோசித புத்தியால் பாராட்டு பெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் எதிர்பாராத சலுகைகளும் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிகமாகவே லாபம் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் விலகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை திருப்திகரமாகவே இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாருக்காகவும் எதற்காகவும் கடன் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை முற்றிலும் நீக்கி விட வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்கள் எதிலும் ஈடுபடக் கூடாது. சிலர் தவறாக வழிநடத்த முயல்வார்கள் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். மேலும் அந்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பதில் கவனத்தை செலுத்துவதன் மூலம் சுமூகமான சூழ்நிலை ஏற்படும். உடன் பணிபுரிபவர்கள் எந்த நேரத்தில் எப்படி எதிரிகளாக மாறுவார்கள் என்பதை யோசிக்க முடியாத அளவிற்கு சூழ்நிலை இருக்கிறது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலை பொருத்தவரை லாபம் அதிகமாகவே தான் இருக்கும். இருப்பினும் தொழிலில் அலட்சியம் காட்டாமல் கவனம் செலுத்தினால் தான் அந்த லாபத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். கடன் வாங்கி முதலீடு செய்வதை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிகள் வெற்றியடையும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிகமாகவே பணவரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் சேமிப்பு உயர்வு அதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. உடல் நலனை பொருத்தவரை சற்று கவனமாக இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். முயற்சிகளை சிறப்பாக செய்ய வாழ்க்கைத் துணை பக்க பலமாக இருப்பார்கள். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கூடுதல் கவனம் தேவை. விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
வேலையை பொருத்தவரை உற்சாகமான சூழ்நிலையே இருக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகளும் இருக்கிறது. இதுவரை இருந்து வந்த அவப்பெயர்கள் நீங்கி நற்பெயர் உண்டாகும். நல்ல வேலைக்காக எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்றார் போல் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழிலை முன்னேற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் சாதகமான எடுத்த முயற்சிகளில் சாதகமான பதில் வரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடாஜலபெருமாளை வழிபட வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட நல்ல பண வரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். உடல் நலம் சீராகும். நீண்ட காலமாக வீடு மனை வாங்க விற்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டகரமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அவ்வாறு சூழ்நிலை ஏற்படும் பொழுது கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. புதிதாக வேலைக்கு எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு லாபகரமான நல்ல வேலை கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் புதிய முயற்சிகள் எதையும் இப்போதைக்கு எடுக்க வேண்டாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாளை வழிபட வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடினமாக உழைக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எந்தவித குறைவும் இருக்காது. செலவுகள் ஏற்பட்டாலும் அதை எளிதாக சமாளித்து விடுவீர்கள். திடீரென்று பெரிய செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருந்தாலும் கடன் வாங்காமல் சமாளிப்பதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் சோர்வு போன்றவையும் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும் வாரமாகவே இந்த வாரம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல செய்தி வீடு தேடி வரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான செய்திகள் கிடைக்கப்பெறும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும். அதே சமயம் எதிர்பாராத செலவுகளும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கவனமாக செயலாற்ற வேண்டும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி வீடு தேடி வருவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நன்மை தரும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை ககாணப்படுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு எதிர்பார்த்து அளவிற்கு சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் தென்படுகிறது. தொழிலை பொருத்தவரை லாபம் திருப்திகரமாகவே இருக்கும். அதனால் தொழிலை விரிவு படுத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள் உடன் இருப்பவர்களின் துணையுடன் அடுத்த கட்ட முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொறுத்தவரை எதிர் பாராத பண வரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது. உடல்நலம் சீராக செயல்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்குரிய முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் இருக்கும் நபர்களால் கவுரவம் அதிகரிக்க வாய்ப்புகளும் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். அதை சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த லாபம் கிடைக்காது. எனினும் நஷ்டம் ஏற்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலை விரிவு படுத்த வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உயர்வை பெறக்கூடிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு திருப்திகரமாகவே இருக்கும். ஒரு சிலருக்கு செலவுகள் உயரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயலாற்றினால் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நன்மை தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். அதிகாரிகளால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக செயலாற்ற வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. மேலும் தொழிலை விரிவாக்க நினைப்பவர்கள் அதற்குரிய முயற்சிகளை இந்த வாரத்தில் எடுக்கும் பொழுது கண்டிப்பாக முறையில் வெற்றிகள் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு சாதகமாக இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் பழைய கடன்களை தீர்க்க முடியும். உடல் நலனில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. ஒரு சிலருக்கு திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும். அதனால் உற்சாகமாக செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. கிடைப்பது சற்று கடினமாகவே இருக்கும். தொழிலை விரிவு படுத்துவதற்காக எந்த முயற்சிகளையும் எடுப்பதை இந்த வாரம் தவிர்ப்பது நன்மை தரும். அதே சமயம் எந்த வித முக்கியமான முடிவுகளையும் தன்னிச்சையாக எடுப்பதை தவிர்த்துக் கொள்வது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குதூகலமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை சீரான பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது அதே சமயம் பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. உடல் நலனில் கவனம் தேவை. எதிர்பாராத பயணங்களால் உடல் அசதியும் மனசோர்வும் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் வாரமாக தான் இந்த வாரம் இருக்கும். இதுவரை தவறாக புரிந்து கொண்ட உற்றார் உறவினர்கள் அனைவரும் விரும்பி வந்து மன்னிப்பு கேட்டு ஒன்று சேர்வார்கள்.
வேலையை பொருத்தவரை மகிழ்ச்சிகரமான சூழ்நிலையே தென்படுகிறது. உடன் பணிபுரிபவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதனால் ஆதாயமும் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பழனி ஆண்டவரை வழிபட வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவிற்கு எந்தவித குறையும் இருக்காது. அதே சமயம் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. உடல் நலனை பொருத்தவரை நன்றாக இருக்கும். இருந்தாலும் உணவு பழக்க வழக்கத்தில் சற்று கவனமாக இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி அந்யோனியம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. திருமணத்தை எதிர்பார்த்து இருக்கும் நபர்களுக்கு நல்ல செய்தி வீடு தேடி வரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாகவே இருக்கும். அதனால் இதுவரை இருந்து வந்த மன உளைச்சல் நீங்குவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்திருந்த லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்ற பாதைக்கு நடத்து செல்ல பல முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.
Leave A Comment