• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி..? நவம்பர் 06 முதல் நவம்பர் 12 வரை 12 ராசிகளுக்குமான பலன்கள்!

    06/11/2023 முதல் 12/11/2023 வரையான இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்குமான ராசிபலன்.

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எந்தவித குறையும் இருக்காது. பணவரவு தாராளமாகவே இருக்கும். இதுவரை உடல் நலக்கேடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்நலம் சீராகும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்வு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது.

    வேலையை பொருத்தவரை உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உண்டு பண்ணும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. மேலும் உடன் பணி புரிபவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது கடினமாகவே இருக்கும். கடின உழைப்பிற்குப் பிறகு அதற்குரிய பலனை அடைய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிதாக எந்த வியாபாரத்திலும் முதலீடு செய்வதை தவிர்த்துக் கொள்வது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எந்தவித குறையும் இருக்காது. செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதை எளிதாக சமாளித்து விடுவீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பும் அனுசரணையும் அதிகரிக்கும். திருமண வரனை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வீடு தேடி வரும். எந்த சூழ்நிலையிலும் உடன் இருப்பவர்களிடம் தேவையற்ற வார்த்தைகள் விடுவதை தவிர்த்துக் கொள்வது நன்மை தரும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்யாமல் இருப்பது நன்மை தரும். கொடுத்த வேலையை திறப்பட முடிப்பதன் மூலம் உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. புதிதாக எந்த முதலீடுகளும் செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல செய்தி வீடு தேடி வரும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை பணவரவு தாராளமாகவே இருக்கும். அதுக்கேற்றால் போல் செலவுகளும் ஏற்படும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. பேச்சில் கவனம் தேவை. குடும்ப விஷயத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நன்மை தரும். திருமண வரனை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வருவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. உடல் நலனில் சிறிது அக்கறை தேவை. சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சிலர் தங்களுடைய பழைய கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள்.

    வேலையை பொருத்தவரை உங்களுக்கு சாதகமாகவே அனைத்தும் தென்படும். புதிதாக வேலை தேட முயற்சி செய்பவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும் அமைப்பு இருக்கிறது. வேலையில் திறன் பட செயலாற்றுவதால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் தொழிலை விரிவு படுத்த முயற்சி செய்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையை கையாள வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை திருப்திகரமாகவே இருக்கும். தேவையான செலவுகளை மட்டும் செய்வதன் மூலம் கடன் வாங்குவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். ஒரு சிலருக்கு திருமணம் முயற்சிகள் வெற்றி பெறும். உடல் நலனில் கவனம் தேவை. உபாதைகள் ஏற்படும் பொழுது அதற்குரிய மருத்துவரை அணுகி உடல் நலனை கவனித்துக் கொள்ள வேண்டும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதற்கு ஏற்றார் போல் சலுகைகளும் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. எனினும் நஷ்டத்தில் போவதற்கு வாய்ப்புகள் இல்லை. தொழிலை விரிவு படுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். முதலீடு செய்வதற்கு இது ஒரு நல்ல காலம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடாசலபதி வழிபட வேண்டும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை திருப்திகரமாகவே இருக்கும். பல வழிகளில் பண வரவு வருவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். இதுவரை உடல் நிலையில் இருந்து வந்த குறைகள் நீங்கி உடல் நலம் மேம்படும். குடும்பத்தில் தேவையற்ற வார்த்தைகளை விடுவதை தவிர்ப்பதன் மூலம் சண்டை சச்சரவுகள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக இருக்காது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிதாகவே இருக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழில் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட முயற்சிகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாளை வழிபட வேண்டும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடன் தொடர்பான பிரச்சனை தீரும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை திருப்திகரமாகவே இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு வருவதற்குரிய வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது. கணவன் மனைவிக்குள் சுமூகமான ஒரு சூழ்நிலையை ஏற்படும். இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. காலநிலை மாற்றத்தால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக பிறரிடம் ஆலோசனை கேட்டு முடிவு எடுத்தால் நன்மை உண்டாகும்.

    வேலையை பொருத்தவரை உற்சாகமான சூழ்நிலை காணப்படும். இருப்பினும் கவனமாக வேலையை செய்து முடிப்பதால் ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வோ கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலை பொருத்தவரை ஏற்ற இறக்கங்களுடன் தான் இருக்கும். எந்த முடிவையும் இந்த வாரத்தில் எடுப்பதை ஒத்தி வைப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை தென்படுகிறது. எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு கிடைக்கும் எனினும் பணத்தை கையாளும் பொழுது கவனத்துடன் கையாள வேண்டும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி சுமூகமான ஒரு சூழ்நிலை ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனத்துடன் இருப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து சேரும் காலகட்டமாக இந்த காலகட்டம் அமையும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்தாமல் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு லாபம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலருக்கு தொழில் தொடர்பாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு செவ்வாய்க்கிழமை விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுப செய்திகள் வந்தடையும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எந்தவித குறையும் இருக்காது. பண வரவிற்கு ஏற்ப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமையுடன் அன்னோனியமாகவும் வாழ்வார்கள். உடல் நலனில் இதுவரை இருந்து வந்த குறைகள் அனைத்தும் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். சுப நிகழ்ச்சிக்குரிய பேச்சு வார்த்தைகள் சமூகமாக நடக்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும். இருப்பினும் வேலையில் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அதனால் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் நிதானமாக முடிவெடுக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு எதிர் பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும். பல வழிகளில் வருமானம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் மற்றவர்கள் தலையிடுவதால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் மூன்றாவது நபரிடம் குடும்பப் பிரச்சினையை கூற வேண்டாம். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் உடனுக்குடன் மருத்துவரை அணுகி நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். பிறரிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். வேலையில் கவனம் செலுத்தி முடித்து விட்டால் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பித்து விடலாம். தொழிலை பொருத்தவரை உழைப்பிற்கேற்ற லாபமே கிடைக்கும். தொழிலை முன்னேற்றத்திற்காக முயற்சிகளை எடுக்கும் பொழுது பெரிய அளவில் எடுக்காமல் சிறிய அளவில் எடுத்தால் வெற்றி கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொல்லைகள் நீங்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவிற்கு எந்தவித குறையும் இருக்காது. சேமிப்புகள் உயரும் என்றாலும் திடீரென்று ஏற்படக்கூடிய செலவுகளால் கையிருப்புகள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. முடிந்த அளவு கடன் வாங்குவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அனுசரித்து செல்வது குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உண்டு பண்ணும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்பொழுது அவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே தென்படுகிறது. ஒரு சிலருக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் வாரமாக இந்த வாரம் திகழப்போகிறது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் சம்பள உயர்வு கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் இருக்கிறது. இதுவரை இருந்து வந்த மறைமுக எதிரிகளின் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த விட லாபம் அதிகமாகவே கிடைக்கும். அதனால் தொழிலில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தொழிலை விரிவு படுத்துவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு திங்கட்கிழமை சிவபெருமானை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாமர்த்தியமாக செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு அதிகமாகவே இருக்கும். செலவுகள் ஏற்படுவது குறைவதால் சேமிப்புகள் உயர்வதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையையும் அமைதியையும் கையாள வேண்டும். உடல் நலனில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை மேற்கொண்டால் பெரிய பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். உறவினர்கள் வருகையால் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக செயலாற்ற வேண்டும்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே தென்படுகிறது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வேலை நிமிர்த்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிகமாகவே லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை விரிவாக்க முயற்சி செய்பவர்கள் உடன் இருப்பவர்களிடம் தகுந்த ஆலோசனைகளை பெற்ற பிறகு முயற்சி செய்ய வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு செவ்வாய்க்கிழமை அன்று முருகரை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிகமான பண வரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி அன்பும் அனுசரணையும் அதிகரிக்கும் வாரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையாக செயலாற்ற வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிகமாக லாபம் கிடைக்கும். கூடுதல் உழைப்பால் கூடுதல் லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி அடையும். இந்த வாரம் மேலும் சிறப்பான வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வெள்ளிக்கிழமை என்று வழிபட வேண்டும்.

    Leave A Comment