இந்த வாரம் எப்படி..? அக்டோபர் 23-29 வரை 12 ராசிகளுக்குமான பலன்கள்!
23/10/2023 முதல் 29/10/2023 வரையான இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்குமான ராசிபலன்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. எதிர்பார்த்ததை விட அதிகமான பண வரவு ஏற்படும். இருப்பினும் அதற்கேற்றவாறு செலவுகளும் வந்து கொண்டே தான் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு விலகக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயர்வதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது.
வேலையை பொருத்தவரை எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. பணியிடங்களில் செல்வாக்கு உயர்வதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. அதே சமயம் வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். யாரையும் நம்பி வேலையை ஒப்படைக்காமல் தாமே செய்வது நன்மை தரும். வியாபாரத்தை பொருத்தவரை வியாபாரம் தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த பயணங்களால் நல்ல லாபங்கள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். எதிர்பார்த்த அளவு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடன் இருப்பவர்களுடன் சற்று எச்சரிக்கையாக இருந்து கொண்டால் பிரச்சனைகள் வருவதை தவிர்த்துக் கொள்ளலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடின உழைப்பு மிகுந்த வாரமாக திகழப் போகிறது. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இதுவரை கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மன கசப்புகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிறருக்கு கடன் கொடுப்பதாக இருந்தாலும் பிறரிடம் இருந்து கடன் வாங்குவதாக இருந்தாலும் சற்று கவனமாக இருப்பது நன்மை தரும். சிலருக்கு அலைச்சல்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் அதில் நல்ல ஆதாயம் கிடைக்கும். கனவுகளை நிறைவேற்றுவதற்காக சற்று கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதுவரை விற்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருந்த இடமும் வீடும் விற்பதற்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். உடல் நலனில் சற்று கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை இதுவரை கிடைக்காத பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. சிலருக்கு புதிய பொறுப்புகள் வருவதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. பணி நிமிர்த்தமாக நீண்ட தூர பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எந்த அளவுக்கு உழைக்கிறீர்களோ அந்த அளவுக்கு லாபம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. கடின உழைப்பே அதிக லாபத்தை பெற்று தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. எச்சரிக்கை மட்டும் அல்லாமல் கவனத்துடனும் இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. பணப்புழக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள் வருவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும்.
வேலையை பொருத்தவரை உயர் பதவிகள் தேடி வருவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் தங்களின் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் தாங்களே செய்தால்தான் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்பட மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தொழிலைப் பொருத்தவரை லாபம் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும் அதிக அளவில் முதலீடு செய்வதை இந்த காலகட்டத்தில் தவிர்க்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் கவனக் குறைவை தவிர்க்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பணவரவிற்கு எந்தவித தட்டுப்பாடும் இருக்காது. அதனால் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதால் செலவுகள் செய்யும் பொழுது கவனமாக செய்ய வேண்டும். தேவையான செலவுகளை மட்டும் செய்தால் பணத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். சிலருக்கு கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கோளாறுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரணையுடன் சென்றால் மகிழ்ச்சி நிலவும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். அதனால் விரக்தியில் வேலை செய்வதை தவிர்த்து விட்டு கூடுதலாக கவனம் செலுத்தி வேலையை செய்து முடிக்க வேண்டும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. தொழிலை மேலும் முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்ல கூடுதலாக கவனத்துடன் உழைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமாக செயல்பட்டால் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தடைகள் விலகும் வாரமாக திகழப்போகிறது. பணவரவிற்கு எந்தவித குறைவும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தேவையற்ற செலவுகள் எதையும் செய்ய மாட்டீர்கள். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று கவனமாக செல்ல வேண்டும்.
வேலையை பொருத்தவரை இதுவரை இருந்து வந்த வேலை சுமை அனைத்தும் குறைந்து உங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் இருக்கிறது. சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மேலும் தொழிலை முன்னேற்றுவதற்குரிய பாதையில் கொண்டு செல்வீர்கள். தொழில் சார்ந்த நல்ல செய்திகள் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுப செலவுகள் அதிகரிக்கும் வாரமாக திகழப்போகிறது. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருந்தாலும் அதனால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது. கணவன் மனைவிக்குள் நல்ல ஒரு சுமுகமான சூழ்நிலை ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. உடன் இருக்கும் உறவினர்களால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை என்பது அதிகமாகவே இருக்கும். அதற்கேற்ற நல்ல சலுகைகளும் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. குறித்த நேரத்தில் வேலையை முடித்தால் தான் சலுகைகளை பெற முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தொழிலைப் பொருத்தவரை லாபம் சற்று குறைவாக தான் இருக்கும். இந்த வாரத்தில் தொழிலுக்காக செலவு செய்வதை குறைத்துக் கொண்டு இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடைய முயற்சிக்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. எதிர்பார்த்த அளவு பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இதுவரை கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி வீடு தேடி வரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். இருந்தாலும் உடன் பணிபுரிபவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிர்பார்த்த அளவிற்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகளும் இருக்கிறது. தொழிலை பொருத்தவரை கடினமாக உழைத்தாலும் அதற்கேற்ற லாபம் கிடைப்பது சற்று குறைவாகவே இருக்கும். பொறுமையை கடைப்பிடித்தால் பிற்காலத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. பெரிய மனிதர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக திகழப்போகிறது. எதிர்பார்த்த பணவரவு சுமாராக தான் இருக்கும். அதற்கேற்றாற்போல் தான் செலவுகளும் ஏற்படும். உற்றார் உறவினருடன் பழகும் பொழுது கவனத்துடன் பழக வேண்டும். இல்லையேல் மனவருத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரித்து மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.
வேலையை பொருத்தவரை எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். கூடுதல் பொறுப்புகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட லாபம் அதிகமாகவே கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும் அதனால் வியாபாரத்தில் போட்டிகள் கடுமையாக ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அந்தப் போட்டிகளை சமாளித்து விட்டால் பெரிய அளவில் வெற்றிகள் பெறலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரக்கூடிய வாரமாக திகழப் போகிறது. பணவரவிற்கு எந்தவித குறைவும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே தென்படும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கி சுமூகமான சூழ்நிலை உண்டாக்கும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பொறுமையை கடைப்பிடித்தால் மகிழ்ச்சி உண்டாகும்.
வேலையை பொருத்தவரை இதுவரை கிடைக்காமல் இருந்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்து இருந்த இடமாற்றமும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை ஏற்ற இறக்கங்கள் காணப்படும். எதிர் பார்த்த அளவிற்கு லாபத்தை பெற முடியாது. உடன் இருக்கும் நபர்களை அனுசரித்து சென்றால் முயற்சிகளில் வெற்றிகளை காண முடியும். இருப்பினும் தொழிலைப் பொறுத்தவரை கூடுதல் கவனத்துடன் செயலாற்றினால் நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பண வரவு அதிகரிக்கும் வாரமாக திகழப்போகிறது. எதிர்பார்த்ததைவிட அதிகமான பண வரவு ஏற்படும். வரவே வராது என்று நினைத்திருந்த பணமும் வந்து சேரும். சிலருக்கு திருமணம் முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்குள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். உடல் நலனில் சற்று கவனம் தேவை. உணவுப் பழக்கங்களில் கூடுதல் கவனம் தேவை. யாரிடமும் தவறான வார்த்தைகளை உச்சரிப்பதோ அல்லது வாக்குறுதிகளை அளிப்பதோ தவிர்க்க வேண்டும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை நல்ல முறையில் செய்து முடிப்பதால் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதனால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த அனைத்து சலுகைகளும் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப் போகிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்றாலும் அதை புத்திசாலித்தனமாக சமாளித்து விடுவீர்கள். பயணம் மேற்கொள்ளும் பொழுது கவனமாக மேற்கொள்ள வேண்டும். உடல் நலனில் சற்று கவனம் தேவை. பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் சிலருக்கு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
வேலையை பொருத்தவரை வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படி உழைத்தால் தான் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இந்த வாரம் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆசைகள் நிறைவேற கூடிய வாரமாக திகழப்போகிறது. மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பண வரவு ஓரளவுக்கு திருப்திகரமாகவே இருக்கும். உங்களை விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து சேர்வார்கள். சுப நிகழ்ச்சிகளில் சில தாமதங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை லாபம் சுமாராகவே இருக்கும். இதுவரை நீங்கள் உழைத்த கடின உழைப்பிற்கும் முயற்சிக்கும் நல்ல பலன் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் உங்கள் கண்முன்னே தோன்றும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
Leave A Comment