• Login / Register
 • ராசி பலன்கள்

  12 ராசிகளுக்குமான இந்த வார ராசி பலன்கள் (15/05/2023 - 21/05/2023)

  15/05/2023 முதல் 21/05/2023 வரையான இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்குமான ராசிபலன்.

  மேஷம்:

  மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திட்டமிட்ட வேலைகளை சரியான நேரத்தில் நடத்தி முடிப்பீர்கள். மாணவர்களுக்கு மனதிற்கு பிடித்த காலேஜில் சீட்டு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அவ்வபோது சின்ன சின்ன சிக்கல்கள் வந்தாலும் அதை சுலபமாக சரி செய்து விடுவீர்கள். உங்களுடைய பேச்சுத் திறமையால் எல்லோரையும் கவரக்கூடிய வாரமாக இந்த வாரம் இருக்கப் போகின்றது. சுப செலவுகள் அதிகரிக்கும். சொத்து விற்பது, வாங்குவது போன்ற வேலைகளை இந்த வாரம் செய்யலாம். பண பரிமாற்றத்தில் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். யாரையும் நம்பி சாட்சி இல்லாமல் பண பரிவர்த்தனை செய்ய வேண்டாம். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும் போது மகாலட்சுமியை நினைத்துக் கொள்ளுங்கள்.

  ரிஷபம்:

  ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாகத் தான் இருக்க போகின்றது. உங்களுடைய வெளி வேலைகள், அதாவது அலுவலக வேலை, தொழில் இப்படிப்பட்ட விஷயங்களில் பெரிய அளவில் பிரச்சனை இருக்காது. ஆனால், குடும்பம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் அதை சிறியதாக இருக்கும் போதே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். ஈகோ பிரச்சனை இருவருக்குள், பிரிவை ஏற்படுத்தி விடும். சொந்த பந்தங்களிடம் கடினமான வார்த்தைகளை பேசாதீர்கள். வீட்டில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தினமும் வீட்டில் பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.

  மிதுனம்:

  மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாகவே இருந்தாலும், சில விஷயங்களில் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளுடைய பேச்சு செயல்பாடுகள் முன்னேற்றம் அனைத்தும் உங்களுக்கு மனமகிழ்ச்சியை கொடுக்கும். வீட்டில் விருந்தாளிகள் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். ஆனால், இந்த வாரம் புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. தொழிலில் புதிய முதலீட்டை போட வேண்டாம். யாரிடமும் கடன் வாங்க வேண்டாம். மற்றபடி விவசாயிகளுக்கு இந்த வாரம் நன்மை அளிக்கக்கூடிய வாரமாக இருக்கும். கமிஷன் தொழில் நல்ல வருமானம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

  கடகம்:

  கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் நினைத்தது நடக்கக் கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. நீண்ட நாள் கனவு நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் நினைத்த சம்பள உயர்வு பதவி உயர்வு கேட்காமலேயே வந்து சேரும். தொழிலில் நல்ல லாபம் இருந்தாலும், உங்களுடைய பங்குதாரர்களுடன் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். எல்லா கணக்கு வழுக்கையும் யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய பொருட்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த பொருட்களை அலட்சியமாக வைக்க வேண்டாம். கடன் சுமை குறையும். வருமானம் அதிகரிக்கும். 15ஆம் தேதி இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டமம்.

  சிம்மம்:

  சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லாம் நல்லதாகவே நடக்கும். ஆனால் கொஞ்சம் லேட்டா நடக்கும். பலமுறை முயற்சி செய்தால் தான் ஒரு காரியத்தில் வெற்றி கிடைப்பது போல தோன்றும். கொஞ்சம் உடல் அசதி ஏற்படும். நீண்ட தூர பயணத்தை தள்ளிப் போடுவது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லவும். அனாவசியமாக யாரை நம்பியும் உதவி செய்கிறேன், என்று இறக்கப்பட்டு பணத்தை கொடுக்காதீங்க. பிறகு உங்களை ஏமாற்றி விடுவார்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் கொஞ்சம் இழுபறியாக தான் இருக்கும். தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். இந்த வாரம் 16, 17, 18 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம்.

  கன்னி:

  கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. யாரையும் எடுத்தறிந்து பேசாதீங்க. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களை கண்ணா பின்னான்னு திட்டினா கூட, கொஞ்சம் பொறுத்து போங்க. உங்களை பற்றி புரியும் நேரம் ஒரு சில நாட்களில் வந்துவிடும். கோபப்பட்டு வேலையை விட்டு விட்டால் பிறகு வருமானத்திற்கு கஷ்டப்படுவீர்கள். பொறுமை இந்த வாரம் அவசியம் தேவை. தொழிலில் நல்ல லாபம் இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள். தினமும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

  துலாம்:

  துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அலைச்சல் கொஞ்சம் அதிகமாக இருக்கும். எந்த வேலையை தொட்டாலும் அது உடனடியாக முடியாது. இழுபறியாகவே இருக்கும். எரிச்சலை மூட்டக்கூடிய வேலைகளை நம்முடைய நண்பர்களும் உறவினர்களும் செய்து கொண்டே இருப்பார்கள். இரவில் நிம்மதியாக தூக்கம் வராது. கொஞ்சம் இந்த வாரம் சிரமம் இருக்கத்தான் செய்யும். கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாகிவிடும். சொத்தில் இருந்த வில்லங்கங்கள் படிப்படியாக சரியாகும். கூடிய சீக்கிரமே நீங்கள் நினைத்தது நடக்கும். தினமும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

  விருச்சிகம்:

  விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பண பிரச்சனை இருக்கும். வருமானம் எவ்வளவு தான் வந்தாலும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. குழந்தைகள் மேல் படிப்புக்காக செலவு, சில பேர் வீட்டு பராமரிப்பு பணிக்காக செலவு செய்வார்கள். சிலர் ஆடம்பரப் பொருட்களை செய்வார்கள். சிலர் அனாவசியமாக பணத்தை செலவு செய்வார்கள். எப்படியோ உங்கள் கையில் இருந்து பணம் கரைய போவது மட்டும் உறுதி. அது எந்த செலவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். யாருக்கும் நம்பி வாக்கு கொடுக்காதீங்க. வாக்கை நிறைவேற்றாமல் அவதிப்பட வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

  தனுசு:

  தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத பண வரவு சந்தோஷத்தை கொடுக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளுடன் சந்தோஷமாக வெளியூர் பயணம் செய்வீர்கள். தொழிலில் புதிய முதலீடு செய்து அமோகமான லாபத்தை பெறுவீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். உங்களுடைய பெயர் புகழ் 4 பேருக்கு பரவும். அந்த அளவுக்கு பிரபல்யமாக போனீங்க என்றால் பாருங்களேன். தினம்தோறும் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்வது மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.

  மகரம்:

  மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வரவேற்பு இருக்கும். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு மரியாதை தான். நாலு பேர் மதிக்கும் அளவுக்கு உங்களுடைய வாழ்க்கை தரம் உயரப் போகின்றது. குடும்பத்தில் இருக்கும் பெண்கள் நல்ல பெயர் வாங்குவீர்கள். புதுசாக கல்யாணம் ஆன பெண்கள் மாமியார் வீட்டில் பெயர் புகழோடு இருப்பீர்கள். 12 ஆம் வகுப்பு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மேல் படிப்புக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இப்படி எல்லோருக்கும் இந்த வாரம் நிறைய நன்மைகள் நடக்கப் போகின்றது. இந்த நல்ல நேரத்தில் குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது நல்லது.

  கும்பம்:

  கும்ப ராசிக்காரர்களுக்கு சில சின்ன சின்ன அடிகள் இந்த வாரம் ஏற்படும். ரொம்பவும் முயற்சி செய்த காரியத்தில் தோற்றுப் போய் துவண்டு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கஷ்டப்படாதீங்க. நிலைமை மாறும். பணம் வீண் விரயம் ஆகும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இருந்தாலும் அவசர தேவைக்கு அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்கி பின்னாடி கஷ்டப்படாதீங்க. சில பேர் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து வெளிநாட்டிலிருந்து கஷ்டப்படக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும். கமிஷன் பிசினஸ் நல்ல லாபத்தைத் தரும். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உள்ளது. இரவு 10 நிமிடம் கண்களை மூடி மனதை அமைதிப்படுத்தி ஓம் நமசிவாய மந்திரம் சொல்லி தியானம் செய்வது நல்லது.

  மீனம்:

  மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிரமங்கள் இருக்கும். சொந்த பந்தங்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. செலவுகளும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் வரும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். வண்டியில் செல்லும்போது கவனத்தை சிதற விடாதீர்கள். ஹெல்மெட் போட்டுக்கோங்க. விலை உயர்ந்த பொருட்களை கொஞ்சம் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். பிரச்சனைகள் வந்தாலும் துவண்டு போகக்கூடாது. எதையும் எதிர்த்து போராட வேண்டும். குடும்பத்தோடு ஒரு முறை குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது நல்லது.

  Leave A Comment