• Login / Register
 • ராசி பலன்கள்

  12 ராசிகளுக்குமான இந்த வார ராசி பலன்கள் (08/05/2023 - 14/05/2023)

  08/05/2023 முதல் 14/05/2023 வரையான இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்குமான ராசிபலன்.

  மேஷம்:

  மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும் எல்லா விஷயத்திலும். அலட்சியப்போக்கோடு நடந்து கொள்ளக் கூடாது. விலை உயர்ந்த பொருட்களை கொஞ்சம் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை எடுத்தெறிந்து பேசாதீர்கள். பெற்றவர்கள் பிள்ளையின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தனியாக இருக்கும்போது என்ன செய்கிறார்கள் என்பதை கொஞ்சம் கண்காணித்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். இன்று 8ம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினமும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

  ரிஷபம்:

  ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை நடக்கக் கூடிய வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் இது வரை இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சொந்த தொழிலை விரிவு படுத்தலாம். புதிய யுக்திகளை கையாளலாம். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இப்படி எல்லாம் உங்களுக்கு நல்லதாகவே நடந்தாலும், இந்த வாரம் நடக்கும் புதிய நண்பர்கள் சேர்க்க வேண்டாம். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். குறிப்பாக எதிர்பாலின நட்பு சில பிரச்சனைகளை உண்டு பண்ணும். இந்த வாரம் 9, 10 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினமும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு வழிபாடு செய்வது நன்மை தரும்.

  மிதுனம்:

  மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வருமானத்தை பெற்று தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்து பார்க்க முடியாத தொகை உங்கள் கைக்கு வரலாம். அது தொழிலில் லாபமாகவோ வரலாம், இல்லையென்றால் பூர்வீக சொத்து விற்றும் காசு பணம் கையில் வரும். லாட்டரி அடித்து கூட வரும் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஜாக்பாட் அடிப்பது உறுதி. அது எந்த ரூபத்தில் என்று யாருக்கும் தெரியாது. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். நேர்வழியில் சென்றால் எல்லாம் நன்மையே. இந்த வாரம் 10, 11 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. சிவன் வழிபாடு நன்மை தரும்.

  கடகம்:

  கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசை நிறைவேறும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். மனதுக்கு ரொம்பவும் பிடித்தவர்களை சந்தித்து நேரத்தை செலவழிப்பீர்கள். வேலை பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கு ஏற்ற ஊதியமும் பாராட்டும் கிடைத்து விடும். கணவன் மனைவி பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்ய மூன்றாவது நபரை கூப்பிடாதீங்க. இத வரை இருந்த பண பிரச்சனை படிப்படியாக சரியாகிவிடும். தினமும் வீட்டில் குல தெய்வத்தை நினைத்து விளக்கு போடுவது நன்மை தரும்.

  சிம்மம்:

  சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் போட்டி பொறாமைகள் நிறைந்த வாரமாக இருக்கின்றது. நீங்கள் ஒரு வேலையை செய்து அதில் முன்னேற்றமடைந்து விட்டால், உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு அது பொறுக்காது. உடனடியாக அந்த வேலையை குறை சொல்வார்கள். உங்களைப் பற்றி பின்னால் புறம் பேசுவார்கள். ஊர் அப்படித்தான் பேசும். அதை காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் வேலையை நீங்கள் சரியாக செய்தால் வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம். எதிரிகளை சந்தித்துதான் ஆக வேண்டும். எதிரிகளை பின்னுக்கு தள்ளி தான் ஆக வேண்டும். ஒருவர் தோல்வியில் தான் இன்னொருவர் வெற்றி இருக்கிறது என்பதை மனதில் ஆழ பதிய வைத்துக் கொண்டு முயற்சிகளில் ஈடுபடுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும். தினமும் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் சொல்லுங்கள்.

  கன்னி:

  கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகக் கூடிய வாரமாகத்தான் இருக்கும். ஆனால் உங்களுக்கு பிரச்சனைகளால் பெரிய கஷ்டம் எதுவும் வராது. பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்று தவறான பாதைக்கு போகாதீங்க. சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். தொழிலை விரிவு படுவதற்கு  கடன் வாங்கலாம். வங்கி கடன்கள் கிடைக்கும். கமிஷன் பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. செங்கல் மண் கம்பி விற்பவர்கள்  தொழிலில் அதிக ஈடுபாட்டோடு வேலை செய்ய வேண்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். தினமும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

  துலாம்:

  துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய விலை உயர்ந்த பொருட்கள் பணம் நகை, கைபேசி இவைகளை எல்லாம் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் முக்கியமான வேலையை மேலதிகாரிகள் உங்களை நம்பி ஒப்படைத்தால், அதை நீங்கள் தான் செய்ய வேண்டும். அந்த வேலையை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்காதீங்க. உங்கள் காலை வாருவதற்கு நாலு பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்களே கூட எதிரியாக மாறலாம்  எந்த சூழ்நிலையிலும் தெரியாத விஷயத்தில் தலையிடாதீங்க. முன்பின் தெரியாதவர்கள் சொல்வதைக் கேட்கவே கேட்காதீங்க. தினமும் நரசிம்மர் வழிபாடுதான் உங்களை காப்பாற்றும்.

  விருச்சிகம்:

  விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி தரக்கூடிய வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. ஆனால் உங்களுடைய வேலையை மட்டும் நீங்கள் பார்க்க வேண்டும். அனாவசியமாக அடுத்தவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டுவது, அடுத்தவர்கள் பிரச்சனையை அம்பலப்படுத்துவது, போன்ற அதிக பிரசங்கி தனமான வேலையில் ஈடுபட்டால் கடைசியில் ஆப்பு உங்களுக்கு தான். எதிரிகளின் மூலம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யார் என்ன செய்தாலும் நீங்கள் கண்ணை கட்டிக்கொண்டு உங்கள் வேலையை செய்யுங்கள். மனதுக்கு பிடித்த திருமண வாழ்க்கை அமையும். கலைஞர்களுக்கு சிறப்பான வாரம் இது. தினமும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

  தனுசு:

  தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மேல்படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லலாம். நீங்கள் விரும்பிய படிப்புக்கு உண்டான சீட்டு நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நீங்கள் எதை தொட்டாலும் பொண்ணாக கூடிய காலம் இது. ஆகவே வரக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் கோமாதா வழிபாடு நன்மை தரும்.

  மகரம்:

  மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெரிய அளவில் நன்மைகள் நடக்கப் போகின்றது. சொத்து சுகம் வாங்குவதாக இருந்தால் வாங்கலாம். வீடு கட்ட தொடங்கலாம். புதிய தொழில் தொடங்கலாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும். உங்களுடைய திறமை வெளிப்படப் போகின்ற வாரம் இது. எல்லா விஷயத்திலும் வெற்றிக்கான போகிறீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். யாராலும் செய்ய முடியாத வேலையாக இருந்தால் கூட சொடக்கு போடும் நேரத்தில் நீங்கள் செய்து முடித்து விடுவீர்கள். காசு விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். தினமும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

  கும்பம்:

  கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. பல நாள் கஷ்டப்பட்ட வேளையில், இதுனால் வரை பலன் இல்லை என்றாலும் இந்த வாரம் நல்ல பலன் இருக்கும். கஷ்டமெல்லாம் வீணாக போகாது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டு, குடும்ப உறவினர்களை அனுசரித்து செல்லவும். அடுத்தவர்கள் மனது புண்படும்படி காயப்படும்படி பேசாதீங்க. உங்களுக்கு இருக்கும் அதே வலி தான் எதிராளிக்கும். சில பேருக்கு வேலை செய்யும் இடத்தில் கூடுதல் வேலை பளு இருக்கும். அலைச்சல் இருக்கும். உடல் உபாதைகள் ஏற்படும். மருத்துவரை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வண்டியை வேகமாக ஓட்டாதீர்கள். தினமும் வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

  மீனம்:

  மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில கஷ்ட நஷ்டங்கள் வந்து போகும். யார் என்ன சொன்னாலும் உங்கள் வேலையில் கவனமாக இருங்கள். இந்த விஷயத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம், என்று யாரையும் ஏமாற்றாதீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் பொய் சொல்லி தப்பிப்பதை விட, உண்மையைச் சொல்லி மாட்டிக் கொள்வது நல்லது. பணக்கஷ்டம் இருக்கும். வருமானம் குறையும். அடுத்த வாரம் செலவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாட்டம் இருக்கும். கவலை வேண்டாம் எல்லாம் சரியாகிவிடும். தினமும் முருகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

  Leave A Comment