• Login / Register
  • ராசி பலன்கள்

    இன்றைய ராசிபலன் – 27 மார்ச் 2023

    திங்கள்கிழமை

    27 - 03 - 2023

    சுபகிருது ஆண்டு - பங்குனி-13 ஆம் தேதி

    மேஷம்:

    மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த சிறு சிறு சண்டை சச்சரவுகள் நீங்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை காண கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

    ரிஷபம்:

    ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த விஷயங்களில் ஏமாற்றம் அடையலாம் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பங்கதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உரிமைகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.

    மிதுனம்:

    மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். கணவன் மனைவி இடையே தகராறுகள் நடக்கலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் உயர கூடுதல் உழைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலட்சியம் இழப்பை தரும்.

    கடகம்:

    கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை அடைவதில் காலதாமதங்களை சந்திக்கலாம். முன் பின் தெரியாதவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் பயணங்களால் புது அனுபவங்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு டென்ஷன் இருக்கும்.

    சிம்மம்:

    சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிறு சிறு முயற்சிகள் கூட பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்க போராடுவீர்கள்.

    கன்னி:

    கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடும் போராட்டம் நற்பலன்களை கொடுக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே புரிதல் உண்டாகும். சுய தொழிலில் நேர்மையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனாவசிய வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உண்டு கவனம் தேவை.

    துலாம்:

    துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு என்பதை காட்டுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் உங்களுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரிகளால் சில சங்கடங்கள் வரக்கூடும்.

    விருச்சிகம்:

    விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய கடமைகளை சரிவர செய்வது நல்லது. குடும்ப விஷயங்களில் பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகள் மேலோங்கும் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் வரும்.

    தனுசு:

    தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். குடும்ப உறவுகள் உங்களுக்கு துணையாக செயல்படுவார்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன்பிறந்தவர்களால் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு.

    மகரம்:

    மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும் நல்ல நாளாக இருக்க போகிறது. கணவன் மனைவி உறவுக்கு இடையே பேச்சில் கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அலைச்சல் ஏற்படும்.

    கும்பம்:

    கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

    மீனம்:

    மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எதிர்த்து போராடும் குணம் உங்களுக்கு இருக்கும். அனாவசிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர சகோதரிகளுக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். சுயதொழிலில் எதிர்பாராத லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

    Leave A Comment