• Login / Register
 • ராசி பலன்கள்

  12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன்!

  13/03/2023 முதல் 19/03/2023 வரையான இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்குமான ராசிபலன்.

  மேஷம்:

  மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பம் இல்லாத தெளிவான வாரமாக இருக்கும். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். குழப்பமான சிக்கலான விஷயங்களைக் கூட தெளிவுபடுத்தி ஒரு முடிவுக்கு வந்து விடுவீர்கள். கடன் தொகையை திருப்பிக் கொடுக்கக்கூடிய நேரம் வந்துவிட்டது. வடிகட்ட வேண்டிய சூழ்நிலை இனி கிடையாது. வீட்டிற்கு தேவையான அழகு சாதன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். சொந்தத் தொழிலில் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது. தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

  ரிஷபம்:

  ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. பெயர், பாராட்டு, புகழ், இவைகளை சுமக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். அத்தனை நல்ல பெரும் உங்களுக்கு கிடைக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை உண்டாகும். ஆன்லைன் பிசினஸ் சுமூகமாக நடக்கும். திருமணம் கைகூடி வரும். இந்த வாரம் 14, 15, 16 ஆகிய தேதிகள் உங்களுக்கு சந்திராஷ்டமம் ஜாக்கிரதை. தினமும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள்.

  மிதுனம்:

  மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த வாரமாகத் தான் இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் கையில் எடுத்தவுடன் வெற்றி கிடைக்காது. விடாமுயற்சி மட்டும் தான் வெற்றியை கொடுக்கும். ஆகவே அசந்து போய் உட்காராதிங்க. எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டே இருங்கள். நிச்சயம் நன்மை நடக்கும். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவு எடுக்க வேண்டும். தொழில் சிறப்பாக நடக்கும். வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை இன்றைக்கு செய்து முடித்தால் பிரச்சனை இல்லை. இன்றைக்கு செய்யக்கூடிய வேலையை செய்யாமல் விட்டால் இந்த வாரம் பிரச்சினை தான். தினம்தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

  கடகம்:

  கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக இருக்கப் போகின்றது. எல்லா வேலையையும் சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். பெரிய பெரிய பிரச்சனை வந்தால் கூட அதை தூசு போல ஊதி தள்ளி விடுவீர்கள். உங்களுடைய திறமைக்கு பெரிய கிரீடம் தான் வைக்க வேண்டும். சம்யோஜித புத்தியும், புத்திசாலித்தனமும் உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல போகின்றது. நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். சந்தோஷத்திற்கு குடும்பத்தில் நிம்மதி நிலவும். தினம் தோறும் சிவன் கோவிலுக்கு செல்வது நன்மை தரும்.

  சிம்மம்:

  சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. உங்களுடைய வேலையை மட்டும் நீங்கள் சரியாக பார்க்க வேண்டும். அனாவசியமாக அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடக்கூடாது. அப்படி சென்றால் பிரச்சனை உங்களுக்குத்தான். வீதியில் இரண்டு பேர் அடித்து சண்டை போட்டுக் கொள்கிறார் என்றால் கூட, நீங்க தடுக்க போகக்கூடாது. பிறகு பஞ்சாயத்தை உங்கள் தலையில் கட்டி விடுவார்கள். சொந்த தொழிலில் முதலீட்டை அதிகமாக்க வேண்டாம். பங்குதாரர்களை நம்ப வேண்டாம். கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். யாரை நம்பியும் கடன் அதிகமாக கொடுக்க வேண்டாம். கடனுக்கு தொழில் செய்யாதீங்க. கையில் காசு, வாயில் தோசை அவ்வளவுதான். தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

  கன்னி:

  ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. சந்தோஷமும் சங்கடமும் சரி பாதி. கணவன் மனைவி இடையே சின்ன சின்ன சிக்கல்கள் வந்து சரியாகும். மூன்றாவது மனிதரிடம் உங்கள் குடும்பப் பிரச்சினையை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வெளிநாட்டில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேறொரு வேலை கிடைக்கும் வரை இருக்கும் வேலையை விட வேண்டாம். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வரும். பூர்வீக சொத்து கைக்கு வந்து சேருவதற்கு நேரம் காலம் கூடி வந்துவிட்டது. கடன் தொகையை திருப்பிக் கொடுத்து நிம்மதி அடைவீர்கள். யாருக்கும் வாக்கு கொடுக்காமல் உங்கள் வேலையை நீங்கள் பார்த்தால் பிரச்சனை இல்லை. தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

  துலாம்:

  துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை நடக்கக்கூடிய வாரமாக இருக்கும். வாழ்க்கையின் எதிர்காலத்திற்கு தேவையான நன்மை தீமைகளை யோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை விட வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. சொத்து சுகம் வண்டி வாகனம் வாங்குவதாக இருந்தால் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பத்திரத்தில் கையெழுத்து போடும்போது ஒன்றுக்கு பலமுறை பத்திரத்தை படித்துப் பார்க்க வேண்டும். நீண்ட தூர பயணத்தை அடுத்த வாரம் தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடனடியாக மருத்துவரை அணுகவும். கலைத்துறையினர் விவசாயிகள் இவர்களுக்கு இந்த வாரம் அமோகமான வெற்றி உண்டு. புதிய நட்பு பிரச்சினையை கொடுத்து விடும். முன்பின் தெரியாதவர்களிடம் நெருங்கி பழக வேண்டாம். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

  விருச்சிகம்:

  விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுடைய பிரச்சனை எல்லாம் சரி செய்ய நல்ல காலம் பிறந்து விட்டது. தொழில் மேலும் மேலும் முன்னேற்றம் அடையும். அதற்கான உதவிகளை நண்பர்களும் உறவினர்களும் செய்து கொடுப்பார்கள். தெரிந்தவர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எதிர்ப்பாலின நட்பிடம் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உங்களுடைய பெயர் கெட்டுப் போகும் அளவிற்கு சில சம்பவங்கள் நடக்கலாம். மனைவிக்கு தேவையான ஆபரணங்களை வாங்கி கொடுத்து சந்தோஷம் அடைவீர்கள். குறிப்பாக புதுமண தம்பதியருக்கு இந்த வாரம் எதிர்பாராத சந்தோஷம் உண்டு. குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள்.

  தனுசு:

  தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கப் போகின்றது. பிளான் பண்ணி வச்சிருந்த எல்லா வேலையையும் செய்து முடித்து விடுவீர்கள். செலவுக்கு ஏற்ற வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஆக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்காது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள். எதிர்காலத்திற்கு நல்லது. சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம். முன்பின் தெரியாத மனிதர்களிடம் உங்கள் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். கூடவே வேலை செய்யும் நண்பர்களாக இருந்தாலும் அளவோடு பழகுங்கள். தினம் தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

  மகரம்:

  மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஓய்வு அவசியம் தேவை. அலைச்சலான விஷயங்களை அடுத்த வரும் தள்ளிப் போடுங்கள். நீண்ட தூர பயணம் செய்யாதீர்கள். நேரத்திற்கு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தேவையற்ற உடல் உபாதைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய பணியில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியமாக நடந்தால் பேரிழப்பு ஏற்படும். கொஞ்சம் அனாவசிய செலவு அதிகரிக்கும். செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

  கும்பம்:

  கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிரமமான வாரமாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் அதிக வேலை பளு இருக்கும். வீட்டில் சின்ன சின்ன பிரச்சனை குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை, அந்த வேலை, இந்த வேலை என்று உங்களுக்கு கொஞ்சம் தலைபாரம் அதிகரிக்க தான் செய்யும். இந்த வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். பற்றாத குறைக்கு தொழில் வேற சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். பெரியதாக பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. குடும்பத்தோடு வீட்டின் அருகில் இருக்கும் முருகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.

  மீனம்:

  மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களை முன்னேற விடாமல் தடுத்த அத்தனை விஷயங்களும் தவிடு பொடி ஆகிவிடும். உங்களுடைய முயற்சி, உங்களுக்கு வெற்றியை தரும். அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டு காலத்தை ஓட்ட முடியாது. கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வங்கி துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. கடன் வாங்காதீங்க. கையில் இருக்கும் காசை அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். உங்களுடைய பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். திருடு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் சபரிமலை ஐயப்பனை மனதில் நினைத்து வழிபாடு செய்வது நன்மை தரும்.

  Leave A Comment