• Login / Register
  • ராசி பலன்கள்

    இன்றைய ராசிபலன் – 22 பிப்ரவரி 2023

    புதன்கிழமை
    சுபகிருது வருடம், மாசி 9-ம் தேதி

    மேஷம்:

    மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். சிலருக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சிலர் தொலைதூர ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.

    ரிஷபம்:

    ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    மிதுனம்:

    மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் உடல் நலம் சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலை இருக்கும். பணிகளை சுலபமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

    கடகம்:

    கடக ராசியினருக்கு இன்றைய தினம் உறவுகளின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். குழந்தைகள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும். சிலர் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்வார்கள்.

    சிம்மம்:

    சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய காரியங்களிலும் ஈடப்பட வேண்டாம் வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. சிலருக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

    கன்னி:

    கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். சிலருக்கு பயணங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

    துலாம்:

    துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் அதிக ஈடுபாடு உண்டாகும் விஐபி க்களின் அறிமுகம் உண்டாகும். ஒரு சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்

    விருச்சிகம்:

    விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்களின் ஆதரவும் அதனால் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும்.

    தனுசு:

    தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும் தம்பதிகளிடையே ஒற்றுமை ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடுவதை தள்ளி போடலாம். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.

    மகரம்:

    மகர ராசியினருக்கு இன்றைய தினம் புதிய வீடு வாகனம் வாங்குகின்ற அமைப்பு ஏற்படும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் சூழல் ஏற்படும்.

    கும்பம்:

    கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத பணவரவு ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். பெண்கள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

    மீனம்:

    மீன ராசியினருக்கு புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும் . தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவார்கள். பணியிடங்களில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    Leave A Comment