• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி..? மே 20 - 26 வரை; மேஷம் - கன்னி ராசிகளுக்கான பலன்கள்!

    20/05/2024 முதல் 26/05/2024 வரையான இந்த வாரத்திற்கான மேஷம் - கன்னி ராசிகளுக்கான ராசிபலன்.

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆரோக்கியமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும். முக்கியமான முடிவுகள் எதை எடுப்பதாக இருந்தாலும் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். அதை திறமையுடன் செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் செயலாற்றுவது நல்லது.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பாராத மன சஞ்சலங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்பு வாய்ப்புகளும் உள்ளது.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை நல்ல முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்வீர்கள்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் அதிகாரிகளிடமிருந்து பாராட்டை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை கடினமான உழைப்புக்கேற்ற லாபமே கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்குரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகரித்தாலும் அலுவலகத்தில் உங்கள் மீது இருக்கக்கூடிய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த அவப்பெயர்கள் மாறி நற்பெயரை எடுப்பீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்துவதற்கு உடன் இருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ரங்கநாத பெருமாளை வழிபட வேண்டும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பண வரவு ஏற்படும். திருமணம் முயற்சிகள் வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.

    வேலையை பொருத்தவரை எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஆகும். பொறுமையுடன் கடமையை செய்வதன் மூலம் விரைவிலேயே சலுகைகளை எதிர்பார்க்க முடியும். தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க சற்று கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மறைமுக எதிரிகளால் இடையூறுகள் ஏற்படும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நம்பிக்கையுடன் செயலாற்றும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.

    வேலையை பொருத்தவரை புதிதாக வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு வேலை ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களில் வெற்றிகள் கிடைக்கும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    Leave A Comment