இன்றைய நாள் எப்படி? 14 ஏப்ரல் 2024!
ஞாயிற்றுக்கிழமை
14 - 04 - 2024
சோபகிருது ஆண்டு – சித்திரை – 01 ஆம் தேதி
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையப் போகின்றது. இந்த வருட பிறப்பு நீங்கள் நினைத்ததை எல்லாம் நடத்தித் தரும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உங்களுடைய தகுதிக்கு ஏற்ப நல்ல விஷயங்களை செய்யுங்கள். அளவுக்கு மீறி ஆசைப்படாதீர்கள். பேராசை படும்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சந்தோஷமான தமிழ் புத்தாண்டை வரவேற்று குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்வீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். விருந்தாளிகளின் வருகை சுப செலவுகளை ஏற்படுத்தும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். தமிழ் புத்தாண்டை இனிமையாக கொண்டாடி மகிழ்வீர்கள். நல்ல சாப்பாடு நல்ல இனிப்பு வகையோடு இந்த நாள் தொடங்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்கப் போகின்றது. புதுசாக ஏதாவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால், இன்று அந்த காரியங்களை தொடங்குங்கள். நல்லபடியாக நடக்கும் என்று நீங்கள் தொடங்கக்கூடிய நல்ல காரியம் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நல்ல பலனை கொடுத்துக் கொண்டே இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு நல்லதையே செய்யும்.
கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. வீட்டில் இருக்கும் பெண்கள் அதிகாலை வேலையிலேயே எழுந்து பூஜையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தமிழ் புத்தாண்டை இனிதாக வரவேற்பீர்கள். பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக உங்களுடைய நேரத்தை செலவு செய்வீர்கள். உங்களுடைய சொந்த பந்தங்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு இனிப்புகளை பரிமாறி உற்சாகமாக இந்த நாளை கடந்த செல்வீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நலம் தரும் நாளாக இருக்க போகின்றது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தமிழ் புத்தாண்டை நல்லபடியாக காலையில் வரவேற்த்து குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று உற்சாகமாக இந்த நாளை தொடங்கியிருப்பீர்கள். இந்த நாளில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாகவே பிறந்தாலும் சின்ன சின்ன மன கஷ்டம் உங்களுக்குள் இருக்கும். சொந்த பந்தங்களுக்குள் சண்டை வர வாய்ப்பு உள்ளது. இந்த சந்தோஷம் தரக்கூடிய தமிழ் புத்தாண்டு அன்று உங்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாலும் சரி, நீங்க உங்க சொந்த பந்தங்களின் வீடுகளுக்கு சென்றாலும் சரி, அளவோடு பேசுங்கள். அனாவசியமாக பேசாதீர்கள். உங்களுக்கும் இன்று நல்லது மட்டுமே நடக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிக்கான பலன் இன்று கிடைக்கும். இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக இனிதே தொடங்கும். வீட்டில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். பெரியவர்களின் ஆசிர்வாதம் உங்கள் வாழ்க்கையை மேலும் முன்னுக்கு எடுத்துச் செல்லும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. இந்த தமிழ் புத்தாண்டை சந்தோஷமாக வரவேற்க போகிறீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். தடபுடலாக சாப்பாடு விருந்து நடக்கும். சுப செலவுகள் உண்டாகும். கூடுமானவரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்க. பெரியவர்கள் சொல்லக்கூடிய பேச்சை கேட்டு நடக்கவும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இன்று நல்லபடியாக புத்தாண்டை வரவேற்பீர்கள். சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். இருந்தாலும் உங்களுடைய மனதில் சின்ன சின்ன பயமும் பதட்டமும் இருக்கும். புதிய முயற்சிகளை எடுப்பதில் சின்ன சின்ன தடைகள் உண்டாகும். இன்றைய நாளை இனிதாக தொடங்கி விட்டீர்கள். அது போதும் மத்த நல்ல விஷயங்களை நாளை பார்த்துக் கொள்ளலாம். இன்று அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள் போதும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய புத்தாண்டு நல்லபடியாக பிறந்திருக்கும். குடும்பத்தோடு சேர்ந்து வழிபாட்டை செய்து முடித்திருப்பீர்கள். இருந்தாலும் உங்களுடைய தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளை கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். இன்று யாரிடமும் கைநீட்டி கடன் வாங்காதீங்க கடன் கொடுக்காதீங்க.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். தமிழ் புத்தாண்டை சந்தோஷமாக வரவேற்று இந்த நாளை தொடங்கி இருப்பீர்கள். இருந்தாலும் உங்களுடைய சுபாவத்தில் கொஞ்சம் அமைதி தேவை. யாரிடமும் முன் கோபப்படக்கூடாது. எடுத்தெறிந்து பேசக்கூடாது. இந்த சந்தோஷமான நாளில் இனிமையான வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துங்கள். உங்களை யாராவது கடுஞ்சொற்களின் மூலம் திட்டினாலும் நீங்கள் அமைதியாக இருந்துகோங்க.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உற்சாகமான நாளாக இருக்கும். தமிழ் புத்தாண்டை சந்தோஷமாக வரவேற்று கொண்டாடி இருப்பீர்கள். சொந்த பந்தங்களுடைய வீடுகளுக்கு சென்று உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு பரிசுகளை பரிமாறிக் கொள்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் பெருகும்.
Leave A Comment