இந்த வாரம் எப்படி..? துலாம் - மீனம் ராசிகளுக்கான பலன்கள்!
01/04/2024 முதல் 07/04/2024 வரையான இந்த வாரத்திற்கான துலாம் - மீனம் ராசிகளுக்கான ராசிபலன்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி கிடைக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். இருப்பினும் சக ஊழியர்களின் உதவியால் அதை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு விரும்பிய இடம் மாற்றம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்காது. எனினும் புதிய வாய்ப்புகள் தேடி வரும் சூழல் உண்டாகும். அதை பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு ஏற்படாது. செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்தால் நல்லது. ஒரு சிலருக்கு நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். இருப்பினும் வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அனுமனை வழிபட வேண்டும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் வாரமாக திகழப்போகிறது. நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படாது என்றாலும் நஷ்டம் ஆகாமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதில் கூடுதல் முயற்சி செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகில்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வராது என்று நினைத்த பணமும் வந்து சேரும். உடல் நலத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். இருப்பினும் பேச்சில் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். யாரையும் நம்பி வேலையை ஒப்படைக்காமல் தாமே செய்வதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த சுபகாரியங்கள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். அதில் கூடுதல் கவனம் செலுத்தி செய்வதன் மூலம் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. அதே சமயம் அதிகாரிகளிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். தொழிலை பொருத்தவரை உழைப்பிற்கு ஏற்ற லாபமே கிடைக்கும். தொழிலில் உடன் இருப்பவர்களுடன் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது. இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி பல வகைகளிலும் அனுகூலமாக திகழும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக தான் இருக்கும். உயர் அதிகாரிகளுடன் பழகும் பொழுது பக்குவமாக பழகுவது நல்லது. உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் சிறிது எச்சரிக்கை தேவை. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
Leave A Comment