• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி..? துலாம் - மீனம் ராசிகளுக்கான பலன்கள்!

    12/02/2024 முதல் 18/02/2024 வரையான இந்த வாரத்திற்கான துலாம் - மீனம் ராசிகளுக்கான ராசிபலன்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புத்துணர்ச்சியுடன் செயலாற்றும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். பணவரவிற்கு ஏற்ற செலவுகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த செயல்கள் அனைத்தும் நிறைவேறும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத திடீர் இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொறுத்த வரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு நடராஜரை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வீண் விரயங்களை குறைத்துக் கொள்வது நன்மையை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். முடிவுகளை எடுப்பதற்கு முன் உரிய நபரிடம் ஆலோசனை செய்து எடுப்பது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் அதை திறமையுடன் செய்து முடிக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் பொறுமையுடனும் கவனத்துடனும் வேலையை கையாளுவதன் மூலம் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று கடினமாகவே இருக்கும். மேலும் மறைமுக எதிரிகள் காரணமாக பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கவனம் தேவை. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய அனுபவம் ஏற்படும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் சிக்கனத்துடன் செயலாற்ற வேண்டும். உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருக்கடியாக இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். அதை திறம்பட செய்வதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். இருப்பினும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான செயல்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆண்டாளை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குதூகலமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பாராத அளவிற்கு பணவரவு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வேலையை பொருத்தவரை அனுகூலமான சூழ்நிலையை தென்படுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

    வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதனால் தொழிலை விரிவு படுத்தவும் நல்ல முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லவும் முற்படுவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வாராகி அன்னையை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆதாயமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு கடன் பிரச்சினை குறைய ஆரம்பிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொறுமையுடன் செயல்படுவது நன்மையை தரும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் திறமைக்கேற்ற சலுகைகள் கிடைக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை உழைப்பிற்கு ஏற்ற லாபமே கிடைக்கும். ஒரு சிலர் கடினமான உழைப்பால் தொழிலை விரிவு படுத்த முயற்சி செய்வார்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சஞ்சலம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும் என்றாலும், வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மையை தரும். நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே தென்படுகிறது. இதுவரை பாராமுகமாக இருந்த உயர் அதிகாரிகள் தங்களின் திறமையை ஆலோசித்து அதற்கேற்ற சலுகைகளை தருவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவிகள் தேடி வரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ரங்கநாத பெருமானை வழிபட வேண்டும்.

    Leave A Comment