இன்றைய நாள் எப்படி? | 03 டிசம்பர் 2023!
ஞாயிற்றுக்கிழமை
03 - 12 - 2023
சோபகிருது ஆண்டு – கார்த்திகை – 17 ஆம் தேதி
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். நிம்மதியாக ஓய்வு எடுத்து, நிம்மதியாக சாப்பிட்டு சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். ஒரு சில பேருக்கு வேலையில் இருந்து தொலைபேசியின் மூலம் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். அதை சமாளிக்க பொறுமையாக யோசிக்க வேண்டும். அவசரப்படக்கூடாது. இன்று விடுமுறை தினம் என்பதால் பெருசாக பிரச்சனை இல்லை. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலையை நிலவும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக குளிர்காலம் என்பதால் ஜலதோஷம் தலைவலி காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வரும். குளிர்ச்சியான உணவு பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். மழை நேரத்தில் வெளியே செல்லாதீங்க. ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். மற்றபடி வியாபாரம் வேலை என்று எல்லா விஷயங்களிலும் சுமூகமான போக்கே நிலவும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் நினைத்த நல்ல காரியங்கள் நடக்கும். அலுவலகத்திலிருந்து தொலைபேசியின் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். பாராட்டுகள் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான சில முடிவுகளை இன்று எடுக்கலாம். மாமியார் மருமகள் சண்டை பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமை அவசியம் தேவை. முன்கோபடக்கூடாது. அனாவசியமாக அடுத்தவர்களை தரைகுறைவாக பேசக்கூடாது. நாவடக்கம் தேவை. பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்கள். வேலையில் பிரச்சனை என்றால் பொறுமையாக இருக்கவும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது. குறிப்பாக இருக்கும் வேலையை விடாதீங்க. புது வேலை கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். அனாவசியமாக அடுத்தவர்களிடம் பொய்யை சொல்லி மாட்டிக் கொள்வீர்கள். பிறகு என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் திக்கித் திணறுவீர்கள். குறிப்பாக வாழ்க்கை துணையிடும் கவனமாக பேசவும். வாழ்க்கை துணையிடம் எந்த விஷயத்தையும் மறைக்காதீங்க. குறுக்கு வழியில் சிந்திக்காதீர்கள். அரசுக்கு புறமான வேளையில் ஈடுபட வேண்டாம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். எதிர்கால சேமிப்புக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். தாய்மாமன் வழி உறவால் நல்லது நடக்கும். சகோதரர்கள் உறவு பலப்படும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை கொஞ்சம் தள்ளி போடவும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருக்கும். காலையில் எழுந்து சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய மாட்டீங்க. நல்ல ஓய்வு எடுப்பீங்க. வீட்டில் இருக்கும் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் வரை எல்லோரும் நல்ல ஓய்வு எடுப்பீங்க. இன்றைய நாள் உங்களுக்கு ரொம்ப ரொம்ப சுமூகமாக செல்லும். பெரிய அளவில் பிரச்சனை இருக்காது. கணவன் மனைவி இடையே மட்டும் வாக்குவாதம் செய்யாதீங்க. பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பொழுதுபோக்கு நிறைந்த நாளாக இருக்கும். நண்பர்களோடு உறவுகளோடு குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சில பேருக்கு உறவுகளால் சங்கடங்கள் வரும். வாக்குவாதம் ஏற்படும். பெரிய அளவில் பிரச்சனை பண்ணாதீங்க. உறவுகளோடு விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. குறிப்பாக சகோதர சகோதரிகள் அனாவசியமாக இன்று சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து சில பிரச்சனைகள் வரலாம். விடுமுறை நாட்களாக இருந்தாலும் சில பேருக்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். வீட்டுப் பெண்களுக்கு கொஞ்சம் உடல் அசதி ஏற்படும். கூர்மையான ஆயுதங்களை சமையலறையில் பயன்படுத்தும் போது கொஞ்சம் கவனத்தோடு இருங்கள். குழந்தைகளின் போக்கில் அக்கறை காட்டுங்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலை செய்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். எந்த வேலியையும் முழுசாக செய்ய முடியாது. உறவினர்கள் நண்பர்கள் என்று யாராவது வந்து உங்களுடைய வேலையை பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள். நீங்களும் பொழுதுபோக்காக பேசி நேரத்தை கழித்து விடுவீர்கள். இன்றைய நாள் முழுவதும் இப்படியே செல்லப் போகின்றது. முடிந்தால் காலையிலேயே எல்லா வேலையையும் கடகடவெ என முடித்து வைப்பது நல்லது. இன்று நேரத்தை வீணாக்கக்கூடிய சூழல்தான் உங்களுக்கு நிலவும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். சுப செலவு ஏற்படும். பெண் குழந்தைகளின் மூலம் மன நிம்மதி கிடைக்கும். வெளியிடங்களில் வேலை செய்பவர்களுக்கு, வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. சில பேருக்கு வேலையில் டீம் லீடர் மேனேஜரின் மூலம் பிரச்சனைகள் வரலாம். பிரச்சனையை சரி செய்ய பொறுமையாக சிந்திக்கவும். பெற்றவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமான வேலையை செய்வீர்கள். விடுமுறை நாளாக இருந்தாலும் வீட்டை சுத்தம் செய்வது, வாகனங்களை பராமரிப்பது போன்ற பழுது பார்க்கும் வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளோடு நேரத்தை செலவழிப்பீர்கள். மனைவிக்கு ஆதரவாக நடந்து கொள்வீர்கள். இதனால் குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். முதலீடு செய்யக்கூடிய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
Leave A Comment