• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி..? நவம்பர் 27 முதல் டிசம்பர் 03 வரை 12 ராசிகளுக்குமான பலன்கள்!

    27/11/2023 முதல் 03/12/2023 வரையான இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்குமான ராசிபலன்.

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையை கையாள வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த நல்ல பண வரவு இருக்கும். எப்போதும் விட கூடுதலான செலவுகள் ஏற்பட்டாலும் அதை எளிதில் சமாளித்து விடுவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரன் அமைய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எதிலும் முடிவை எடுப்பதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து பொறுமையாக முடிவெடுக்க வேண்டும். தேவைப்பட்டால் நலம் விரும்பிகளின் ஆலோசனையையும் கேட்டு முடிவு எடுக்கலாம்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைப்பதால் அந்த வேலையை செம்மையாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டையும் சலுகைகளையும் பெறுவீர்கள். தொழிலை பொருத்தவரை பயணங்களால் வெற்றிகளும் லாபமும் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். லாபம் திருப்திகரமாகவே இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை வருமானத்திற்கு எந்தவித குறைவும் இருக்காது. அதே சமயம் தேவையற்ற விஷயங்களில் பணத்தை முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். உடல் நலனில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்காக கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். புதிய வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக தான் இருக்கும். உழைப்புக்கு ஏற்ற லாபம் தான் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை இந்த வாரம் தவிர்ப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் விருப்பம் நிறைவேறும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பண வரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு நன்கு யோசித்து எடுக்க வேண்டும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். பொறுமையுடன் அந்த வேலைகளை செய்து முடிப்பதால் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். இருப்பினும் தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகளில் சிறு தடங்கல்கள் ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவிற்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலும் பிரச்சினைகளை வெளிநபர்களிடம் கூறாமல் தங்களுக்குள்ளேயே பேசி முடிப்பது பிரிவினையை தவிர்க்க உதவும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். இருப்பினும் மேலதிகாரிகளிடம் பேசும் பொழுது கவனத்துடன் பேசுவதால் தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பங்குதாரர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் நன்மை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமாக செயல்படும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை செலவுக்கு ஏற்ற வரவு இருக்கும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும். திருமண முயற்சிகள் வெற்றி அடையும்.

    வேலையை பொருத்தவரை பணி சுமை குறைவாகவே இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்றாலும் கூடுதல் லாபம் பெறுவதற்கு அதிகமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு பெரிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. இன்னும் சிலருக்கு மறைமுக தொல்லைகள் ஏற்பட்டு நீங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தைரியமாக செயலாற்றும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்ல புரிதல் உண்டாகும். அதனால் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிக்குத் தேவையான உதவி கிடைக்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். இருப்பினும் அதனால் எந்த ஆதாயமும் கிடைக்காது என்றாலும் வேலையை கவனமாக செய்து தவறு நேராமல் பார்த்துக் கொள்வது நன்மையை தரும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட லாபம் அதிகமாகவே கிடைக்கும். அதனால் பழைய கடன்கள் அனைத்தையும் அடைப்பீர்கள். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி வாகை சூடும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதற்கேற்ற அளவு செலவுகளும் இருக்கும். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் நீங்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாகவே இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். தொழிலை முன்னேற்ற மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி அடையும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த பணவரவு கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை மேலும் அதிகரிக்கும். மூன்றாவது நபரால் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் உங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்துவதால் அதில் வெற்றி அடைந்து அதனால் பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். இருப்பினும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்வது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிகமான பணவரவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடல் நலம் நலத்தில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வார்கள். கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னெச்சரிக்கை அவசியம் தேவை.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் அதில் சாமர்த்தியமாக செயலாற்றி மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் எந்தவித பொறுப்புகளையும் ஒப்படைக்காமல் தாங்களே செய்வதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். இதுவரை உடன் இருந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி தொழில் சுமூகமாக நடக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி பணவரவு அதிகரிக்கும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். ஒரு சிலருக்கு பரம்பரை சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. புதிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்ப்பார்த்ததைவிட அதிகமாக லாபம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் தொழிலை நல்ல முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வீர்கள். இதுவரை இருந்து வந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனை அனைத்தும் நீங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை போதுமான அளவு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த வெற்றியை அடைவதற்கு அதிகமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

    வேலையை பொறுத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். இருப்பினும் அதை திறம்பட செய்வதால் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். ஒரு சிலருக்கு தாங்கள் விரும்பிய சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொறுத்தவரை உழைப்பிற்கு ஏற்ற லாபமே கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் சிரமங்களும் தடைகளும் ஏற்படும். பணத்தை புதிதாக எதிலும் முதலீடு செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உதவிகள் கிடைக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை திருப்திகரமாகவே இருக்கும் என்றாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடல் நலனில் முன்னேற்றம் தென்படும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒரு சிலருக்கு அதனால் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். கடினமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன் கிடைப்பது அரிதாகவே இருக்கும். தங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிப்பதற்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழிலை பொருத்தவரை லாபம் திருப்திகரமாக தான் இருக்கும். பங்குதாரர்களின் உதவியால் தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ரங்கநாத பெருமானை வழிபட வேண்டும்.

    Leave A Comment