• Login / Register
 • ராசி பலன்கள்

  இன்றைய நாள் எப்படி..? 19 நவம்பர் 2023!

  ஞாயிற்றுக்கிழமை

  19 - 11 - 2023

  சோபகிருது ஆண்டு – கார்த்திகை – 03 ஆம் தேதி

  மேஷம்:

  மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு பக்குவமாக சமாளித்துக் கொள்வீர்கள். மாமியார் மருமகள் பிரச்சனைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

  ரிஷபம்:

  ரிஷப ராசிக்காரர்கள் இன்று வரக்கூடிய சின்ன சின்ன தோல்விகளை கண்டு பயப்படக்கூடாது. தோல்விகள் தான் வெற்றி படிகளாக மாறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். விடாமுயற்சியோடு ஈடுபடுங்கள். சொந்த தொழிலில் இருந்து வந்த இடையூறுகள் விலகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டு. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று மன நிறைவான நாள்.

  மிதுனம்:

  மிதுன ராசிக்காரர்கள் இன்று எல்லாரையும் அனுசரித்து செல்ல வேண்டும். விடாப்படியாக அடம் பிடித்து நிற்கக்கூடாது. உறவுகளுக்கு இடையே விட்டுக் கொடுத்தல் புரிதலை கொடுக்கும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாதீங்க. வியாபாரத்தில் சக வியாபாரிகளையும் வாடிக்கையாளர்களையும் மரியாதையுடன் நடத்தணும். இல்லையென்றால் இழப்புகள் ஏற்படும்.

  கடகம்:

  கடக ராசிக்காரர்கள் இன்று புதுசாக நிறைய விஷயங்களை யோசிப்பீர்கள். உங்களுடைய சிந்தனை சிறப்பாக இருக்கும். வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சேமிப்பு உயரும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். தாய்மாமன் வழி உறவால் அனுகூலம் உண்டு. கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு இன்று காண்ட்ராக்ட் ஆர்டர்கள் கிடைக்கும்.

  சிம்மம்:

  சிம்ம ராசிக்காரர்கள் இன்று புத்திசாலித்தனத்தால் நிறைய விஷயங்களை சாதிக்க போகிறீர்கள். பாராட்டுகள் கிடைக்கும். நீங்கள் கொடுக்கும் சின்ன சின்ன ஐடியாக்கள் கூட பெரிய லாபத்தை பெறும். இன்னும் சொல்லப்போனால் நீங்கள் இன்று ஐடியா மணி ஆகவே மாறிவிடுவீர்கள். வாழ்க்கை துணைக்கு பிடித்தமான பரிசுகளை வாங்கி கொடுத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் பிறக்கும்.

  கன்னி:

  கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பாராத நபரின் மூலம் எதிர்பாராத பாடத்தை இந்த நாள் உங்களுக்கு கற்றுக் கொடுக்கப் போகின்றது. ஆகவே கெடுதல் நினைத்தால் அதை நினைத்து வருத்தப்படவும் கூடாது. சந்தோஷம் கிடைத்தால் அதை நினைத்து ரொம்பவும் மகிழ்ச்சி அடையவும் கூடாது. நீங்கள் உங்கள் வேலையை செய்யுங்கள். எப்போதும் போல இருங்கள். கடவுள் நிச்சயம் உங்களுக்கு நல்ல வழியை காட்டுவான்.

  துலாம்:

  துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. முக்கியமான விஷயங்களை அடுத்த நாள் தள்ளிப் போடுங்கள். பெரியவர்களின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். அனுபவசாலிகள் சொல்கிறார்கள் என்றால், அவர்கள் பேச்சை தட்டிக் கழிக்க கூடாது. குறிப்பாக மாணவர்கள் சிறுவயதில் இருப்பவர்கள், பெரியவர்கள் பேச்சை கேட்காமல் எடுக்கும் முடிவு நல்ல முடிவாக இருக்காது. பொன் பொருள் ஆபரணங்கள் வைத்துக் கொள்வதில் கவனம் தேவை.

  விருச்சிகம்:

  விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் சந்தேகம் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் நம்ப மாட்டீங்க. இதனால் உறவுகளுக்குள் நண்பர்களுக்குள் சண்டை சச்சரவு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் டீம் லீடர், மேனேஜர் போன்ற நபர்களின் மூலம் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். உங்களை சிக்கலில் மாட்டி வைக்க நாலு பேர் சேர்ந்து திட்டம் தீட்டுவார்கள். அதில் சிக்கிக் கொள்ளாதீர்கள் ஜாக்கிரதை.

  தனுசு:

  தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் தேடி வரக்கூடிய நாளாக அமையும். நீங்கள் செய்யும் சின்ன சின்ன நல்ல காரியத்திற்கு கூட பாராட்டுகள் கிடைக்கும். சில பேர் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடுடன் நடப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. நீண்ட தூர பயணத்தின் மூலம் வெற்றி கிடைக்கும்.

  மகரம்:

  மகர ராசிக்காரர்கள் என்று எல்லா விஷயத்திலும் அலட்சியமாக இருப்பீர்கள். பொறுப்பு இல்லாமல் சில வேலைகளை செய்து திட்டு வாங்குவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை போலவே இன்றைய நாள் செல்லாது. ரொம்ப ரொம்ப வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

  கும்பம்:

  கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சில சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எந்த வேலையை எப்படி செய்வது என்று தெரியாது. இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொள்வீர்கள். பெரியோர்களின் ஆலோசனை கேளுங்கள். ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவு எடுங்கள். அவசரப்படாதீங்க, நிதானம் தான் உங்களுக்கு இன்றைக்கு கை கொடுக்கும். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காமல் கஷ்டப்படும் போது குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.

  மீனம்:

  மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் மன நிம்மதியை கொடுக்கும். மனைவி குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். இன்று மாலை வெளியிடங்களுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. உடல் பருமன் உள்ளவர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள உடல் பயிற்சி செய்வது நன்மை தரும்.

  Leave A Comment