• Login / Register
 • ராசி பலன்கள்

  இன்றைய நாள் எப்படி..? 18 நவம்பர் 2023!

  சனிக்கிழமை

  18 – 11 - 2023

  சோபகிருது ஆண்டு – கார்த்திகை – 02 ஆம் தேதி

  மேஷம்:

  மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்பவும் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எல்லா வேலையும் சொன்ன நேரத்திற்கு முன்னாடியே முடித்துக் கொடுப்பீங்க. வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கட்டும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை என்றால் மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி போடாதீங்க.

  ரிஷபம்:

  ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தைரியம் நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சனை என்று வந்தால் அந்த இடத்தில் வெட்டு ஒன்னு, துண்டு 2 என்று பேசி, பஞ்சாயத்தை முடிப்பீங்க. உங்களைப் பார்த்தால் எதிரிகளுக்கு பயம் வரும். அந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுப்பீங்க. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.

  மிதுனம்:

  மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்காது. எல்லா விஷயத்திலும் நீங்கள் செய்யும் வேலையை அடுத்தவர்கள் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கொஞ்சம் பொறுமை காக்கவும். முன்கோபத்தை குறைக்கவும். கோபப்பட்டு எதிராளியை பேசிவிட்டால் பிறகு பழி உங்கள் மேல் தான் விழும். ஜாக்கிரதை இன்று பொறுமை அவசியம் தேவை.

  கடகம்:

  கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலை செய்வதில் கொஞ்சம் சிரமங்கள் இருக்கும். வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, அலுவலக வேலையாக இருந்தாலும் சரி. உங்கள் வேலையை கெடுப்பதற்கு சரியான நேரத்தில் ஒருவர் வந்து குழப்புவார்கள். இவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தே உங்களுடைய நேரம் போய்விடும். பிக்கல் பிடுங்களை நிறைந்த நாள் இது.

  சிம்மம்:

  சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாக்குகளை நிறைவேற்றி தரக்கூடிய நாளாக அமையும். சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். கவனம் சிதறாது வேலை செய்வீர்கள். நாலு பேரின் பாராட்டை பெறக்கூடிய நாளாக இருக்கும். வாழ்வில் சாதிக்க முடியாத சில நல்ல விஷயங்களை சாதிக்க வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

  கன்னி:

  கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களை நம்பி சில பேர் சில வேலைகளை ஒப்படைப்பார்கள். அதையெல்லாம் கவனமாக செய்து முடியுங்கள். உங்களிடம் கொடுத்த வேலையை, நீங்க இன்னொருவரிடம் நம்பி ஒப்படைக்காதீங்க. நண்பராக இருந்தாலும் அவர்களை இன்று முழுமையாக நம்ப கூடாது.

  துலாம்:

  துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் அசதியும் இருக்கும். எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்தோடு செயல்பட முடியாது. சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். கணக்கு வழக்குகளை சரியாக பாருங்கள். அலட்சியத்தோடு இருந்தால் இழப்பு உங்களுக்கு தான்.

  விருச்சிகம்:

  விருச்சிக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் மதிப்பும் மரியாதையும் உயரும். நான்கு பேருக்கு உதவி செய்யக்கூடிய இடத்தில் நீங்கள் இருப்பீர்கள். மன நிம்மதியான நாள் இது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். பிள்ளைகளால் மனதிருப்தி அடைவீர்கள். குடும்பத்தோடு இன்று மாலை முருகன் கோவிலுக்கு சென்று வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

  தனுசு:

  தனுசு ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கொஞ்சம் ஜாக்கிரதியாக இருக்க வேண்டும். உங்களுடைய விலை உயர்ந்த பொருட்களை பத்திரமா வச்சுக்கோங்க. கைபேசி நகைகள் பணம் இவைகளை எல்லாம் கூடுதல் கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பா பர்ஸில் பயணம் செய்பவர்கள், ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் ஜாக்கிரதை பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  மகரம்:

  மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தபடி நல்லது நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்களை வீட்டு பெரியவர்கள் பேச தொடங்குவார்கள். காதல் கை கூடும். விவசாயிகளுக்கு புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும். கட்டுமான தொழில் மேம்படும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான நாள் இது.

  கும்பம்:

  கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஓய்வு எடுக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தோடு நேரத்தை அதிகம் செலவு செய்வீர்கள். அலுவலகத்தில் வேலை செய்பவர்களும், சீக்கிரம் வீடு திரும்ப வாய்ப்புகள் உள்ளது. வார இறுதி நாள் என்பதால் வேலை சுமை கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உடல் பருமனோடு இருப்பவர்கள் கொஞ்சம் உடல் பயிற்சி மேற்கொள்வது நல்லது.

  மீனம்:

  மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்களுக்கு பிரமோஷன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன சஞ்சலங்கள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும். வாக்குவாதம் செய்யாதீங்க.

  Leave A Comment