• Login / Register
  • விளையாட்டு

    உலக சாதனை படைக்குமா இந்திய அணி?

    தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஐந்து இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இதனிடையே, இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி, இன்று தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.

    தென் ஆப்பிரிக்கவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் விலகியுள்ளனர்.

    ரிஷப் பண்ட் தலைமையிலான இளம் வீரர்களுடன் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கவுள்ளது. முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜாஸ்பிரித் பும்ரா முகமது சமி ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.

    விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியா, சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால்  ஆகியோர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்திய அணி இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 12 போட்டிகளில் வென்றுள்ளது.


    இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றால், 13 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று உலக சாதனையை படைக்க காத்திருக்கிறது.

    தென் ஆப்பிரிக்க அணியும் இளம் கேப்டனான தெம்பா பவுமா தலைமையில், இந்திய அணியை எதிர் கொள்கிறது. 

    இதனிடையே, இந்தாண்டு இறுதியில் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க இருப்பதால், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும்.


    Leave A Comment