• Login / Register
  • விளையாட்டு

    இறுதிப் போட்டிக்கு முன்னேறப் போவது யார்? – குஜராத் Vs ராஜஸ்தான் மோதல்

    15ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது.

    இந்த தொடரில், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரண்டு புது அணிகளுடன், மொத்தம் பத்து அணிகள் களமிறங்கின.

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும், படுதோல்வி அடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியன.

    பிளேஆஃப் சுற்றுக்கு, புதுமுக அணிகளான குஜராத் டைட்டனஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் தகுதி பெற்றன.

    இந்த அணிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

    இதனிடையே, பிளே ஆஃப் சுற்றில், குவாலிபையரின் முதல் ஆட்டம், இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் விளையாட்டரங்கத்தில் நள்ளிரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    இந்தப் போட்டியில், புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, இரண்டாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இந்த தொடரில், இரு அணிகளும் தலா ஒரு முறை மோதியுள்ளன. அதில், ராஜஸ்தான் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியுள்ளது.


    குஜராத் அணியை பொறுத்தவரை டாஸை வென்றாலும், தோற்றாலும் அதை பற்றி கவலையே படமாட்டார்கள். முதலில் பேட்டிங் செய்தாலும், அல்லது சேஸிங் செய்தாலும் மிரட்டலாக செயல்படுவார்கள்.

    குஜராத் அணி பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் அசுர பலத்தில் உள்ளது. இருப்பினும் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 200 ரன்களை கூட அந்த அணியால் ஒரு முறை கூட எட்ட முடியவில்லை.

    இன்றைய போட்டியில், குஜராத் அணி முதலில் பந்து வீசும் பட்சத்தில், ராஜஸ்தான் அணியை 184 ரன்களுக்குள் சுருட்டினால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது. 

    ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியை பொறுத்தவரை 14 போட்டிகளில் 11 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்துள்ளது. இதில் 7 போட்டிகளில் ராஜஸ்தான் அணி வென்றுள்ளது.

    ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் எளிதாக 200 ரன்கள் எடுத்த நிலையிலும், கடைசி 4 ஆட்டங்களில் சுமாராகவே விளையாடியுள்ளது.

    ராஜஸ்தான் அணியின் பலவீனமே சேஸிங் தான், அந்த அணி வீரர்கள், சென்னைக்கு எதிரான போட்டியில் 151 ரன்களை எடுக்கவே திணறினார்கள்.

    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஜாஸ் பட்லர், சிம்ரன் ஹெட்மயர், கேப்டன் சஞ்சு சாம்சன் இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 200 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே, வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளது.

    இன்றைய போட்டியில், வெற்றி பெறுகின்ற அணி நேரிடையாக இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால், இரு அணிகளும் கடுமையாக போராடும்.

     

    Leave A Comment