• Login / Register
  • விளையாட்டு

    பிரெஞ்சு ஓபன்: இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ் 4ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மே 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    இதில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்றில், ஸ்பெயினின் 19 வயது இளம் வீரரான கார்லோஸ் அல்கராஸ், அமெரிக்காவை சேர்ந்த 30ஆம் நிலை வீரரான செபாஸ்டியன் கோர்டாவை எதிர்கொண்டார்.

    இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே கார்லோஸ் அல்கராஸ் அதிரடியாக விளையாடினார்.

    போட்டியின் முடிவில் கார்லோஸ் 6-4, 6-4, 6-2 என செபாஸ்டியன் கோர்டாவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.


    இந்த வெற்றியின் மூலம், பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு நான்காவது சுற்றுக்கு சென்ற இளம் வீரர் என்ற பெருமையை கார்லோஸ் அல்கராஸ் பெற்றுள்ளார் .

    இதற்கு முன்னர், கடந்த 2006 ஆம் ஆண்டில் நோவக் ஜோகோவிச், பிரெஞ்சு ஓபன் தொடரில் இளம் வீரராக நான்காவது சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.



    இதனிடையே, நேற்று நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் போட்டியில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் ரபேல் நடால், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 26ஆம் நிலை வீரரான போடிக் வான் டியை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில், நடால் 6 – 3, 6 – 2, 6 – 4 என்ற நேர் செட்களில் போடிக்கை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    நான்காவது சுற்றில், நடால் கனடாவை சேர்ந்த ஆக்கெரை எதிர்கொள்ள இருக்கிறார்.

    இதேபோல், மற்றொரு போட்டியில், செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச், ஸ்லோவேனியா வீரரான அல்ஜாஸ் பெடெனை 6 – 3 , 6 – 3, 6 – 2 என்ற நேர்செட்களில் எளிதாக வீழ்த்தி, நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    Leave A Comment