• Login / Register
  • விளையாட்டு

    50 விக்கெட்டுக்கள்; இலங்கை வீரர் சாதனை!

    குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இலங்கை வீரர் பிரபாத் ஜயசூரிய இன்று தன்வசப்படுத்தியுள்ளார்.

    சுற்றுலா அயர்லாந்து அணிக்கு எதிரான 2வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

    காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் அயர்லாந்துடன் இடம்பெற்ற போட்டியில் போல் ஸ்டேர்லினை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் தனது 50 ஆவது விக்கட்டினை பெற்றுக்கொண்டார்.

    அத்துடன் குறைந்த டெஸ்ட் போட்டியில் 50 விக்கட்டுக்களை வீழ்த்திய முதலாவது இலங்கை வீரர் என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.

    அவுஸ்திரேலிய அணியை சேர்ந்த சார்ல்ஸ் தோமஸ் டர்னர் 06 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை தனதாக்கியிருந்தார்.

    எனினும் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கட்டுக்களை வீழ்த்திய முதலாவது சுழல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பிரபாத் ஜயசூரிய தனதாக்கிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment