• Login / Register
  • விளையாட்டு

    SLvsNZ 3rd T20: போராடித் தோற்ற இலங்கை - தொடரை வென்றது நியூசிலாந்து!

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வதும் இறுதியுமான டி20 போட்டியில் இறுதிவரை போராடிய இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிபெற்று 1 : 1 என சமநிலை பெற்றிருந்த நிலையில் தொடரை தீர்மானிக்கும் போட்டியாக இன்றைய போட்டி அமைந்தது.

    இந்நிலையில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்றுள்ளது.

    இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் - 73, குசல் பெரேரா - 33, பெத்தும் நிசங்க - 25, தனங்செய டீ சில்வா - 20 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.

    பந்துவீச்சில் பென் லிஸ்டர் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

    183 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி அதிரடியாக ஆடினாலும் இலங்கை பந்துவீச்சாளர்கள் இறுதிவரை நெருக்கடி கொடுத்தனர்.

    நியூசிலாந்து அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

    நியூசிலாந்து அணி சார்ப்பில் Tim Seifert 88 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

    இலங்கை அணி சார்ப்பில் பந்துவீச்சில் லஹிரு குமார 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

    அதனடிப்படையில் 2 - 1 என்ற ரீதியில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

    ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை நியூசிலாந்து அணி வீரர் Tim Seifert பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment