• Login / Register
  • விளையாட்டு

    2nd ODI; இந்தியாவை ஊதித்தள்ளிய ஆஸ்திரேலிய அணி!

    2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த வெற்றி இலக்கை விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.

    இரு அணிக்கும் இடையிலான 2-வது ஆட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து முதலில் ஆடிய இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இந்திய அணி வீரர்கள் நால்வர் ரன்கணக்கை தொடங்காமலேயே வெளியேறியிருந்தமை இந்த பின்னடைவுக்க காரணமாக அமைந்தது.

    இதையடுத்து, சுலபமான வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தார்கள்.

    ஆஸ்திரேலிய அணிக்கு ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷெல் இணை தொடக்கம் கொடுத்தது.

    இருவரும் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து பறக்கவிட்டனர்.

    இறுதிவரை இந்திய பந்துவீச்சாளர்களினால் எவ்வித நெருக்கடியும் கொடுக்க முடியாத நிலையில் அதிரடியில் தெறிக்கவிட்ட இந்த ஜோடி விக்கெட்டைபறிகொடுக்காது வெற்றி இலக்கை எட்டியது.

    11 ஓவர்களிலேயே 121 ஓட்டங்களை பெற்று ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    டிராவிஸ் ஹெட் 51 ரன்களுடனும், மிட்செல் மார்ஸ் 66 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1 : 1 என ஆஸ்திரேலியா சமன் செய்துள்ளது.

    தொடரை தீர்மானிக்கும் 3வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி வரும் 22ம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment