• Login / Register
  • விளையாட்டு

    2வது டெஸ்ட்; முதல் நாளில் நியூசிலாந்து 155 ஓட்டங்கள்!

    சுற்றுலா இலங்கை அணியுடனான 2வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியது.

    நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

    இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 48 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

    நியூசிலாந்து அணி சார்ப்பில் விளையாடிய டெவோன் கான்வே-78, டொம் லதம்-26 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

    பந்து வீச்சில் தனஞ்சய டி சில்வா, கசுன் ராஜித ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

    முதல் நாள் முடிவில் ஆட்டமிழக்காத கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்களையும், ஹென்றி நிக்கோல்ஸ் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

    முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி பந்துவரை போராடிய இலங்கை அணி தோல்வியடைந்த நிலையில் தொடரில் நியூசிலாந்து அணி 1 : 0 என முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment