ஓய்வை அறிவித்தார் டிம் பெயின்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2018-ல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 46-வது கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெயின் நியமிக்கப்பட்டார். 36 வயது டிம் பெயின், 35 டெஸ்டுகள், 35 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
2017-ல் கிரிக்கெட் டாஸ்மேனியா அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை டிம் பெயின் அனுப்பினார். இதுதொடர்பான செய்திகள் வெளியாயின. இந்த விவகாரம் தொடர்பாகச் சில வருடங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. அதில் டிம் பெயின், விதிமுறைகளை மீறவில்லை என்பதால் தண்டனையிலிருந்து தப்பினார். இந்நிலையில் இந்தச் சர்ச்சை ஊடகங்களில் வெளியானதால் இச்சூழலில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நீடிப்பது உகந்ததாக இருக்காது எனக் கருதி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். மனநலத்துக்கு முக்கியத்துவம் அளித்து டிம் பெயின் தற்காலி ஓய்வு எடுப்பதாக 2021 நவம்பரில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அனைத்து விதமான உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக 38 வயது டிம் பெயின் அறிவித்துள்ளார். இந்த வாரம் தனது கடைசி ஷெஃப்ஃபீல்டு ஷீல்ட் ஆட்டத்தில் பங்கேற்றார். பத்து மாத ஓய்வுக்குப் பிறகு இந்தப் பருவத்தில் ஏழு முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடினார்.
Leave A Comment