• Login / Register
  • விளையாட்டு

    ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள்!

    2023 ஐபிஎல்  போட்டியில் அனைத்து அணிகளுக்குமான கேப்டன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

    மார்ச் 31 அன்று தொடங்கும் ஐபிஎல் 2023 போட்டி மே 28 அன்று நிறைவுபெறுகிறது. சென்னை, ஆமதாபாத், மொஹலி, லக்னெள, ஹைதராபாத், பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவாஹாட்டி, தரம்சாலா ஆகிய நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

    இந்த நிலையில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸி. பேட்டர் டேவிட் வார்னர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து 10 ஐபிஎல் அணிகளுக்கான கேப்டன்களின் பட்டியல் உறுதியாகியுள்ளது.

    அதன்படி, குஜராத் - பாண்டியா, சிஎஸ்கே - தோனி  , மும்பை - ரோஹித் சர்மா , சன்ரைசர்ஸ் - மார்க்ரம் , தில்லி - டேவிட் வார்னர் , ஆர்சிபி - டு பிளெஸ்சிஸ், கேகேஆர் - ஷ்ரேயஸ் ஐயர், இராஜஸ்தான் - சஞ்சு சாம்சன் , லக்னெள - கே.எல். ராகுல் , பஞ்சாப் கிங்ஸ் - ஷிகர் தவன்  என குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

    Leave A Comment