பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 தொடருக்காகப் புதிய பயிற்சியாளர்களை அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மார்ச் 24 முதல் தொடங்கவுள்ளது.
சக்லைன் முஷ்டாக்கின் ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து பாகிஸ்தான் அணிக்குப் புதிய பயிற்சியாளர் யாரும் நியமிக்கப்படவில்லை. பாகிஸ்தான் அணிக்குப் பயிற்சியளித்த மிக்கி ஆர்துர், ஆலோசகராகப் பணியாற்றவுள்ளார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்காகப் புதிய பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். தலைமைப் பயிற்சியாளராக அப்துல் ரஹ்மானும் பந்துவீச்சுப் பயிற்சியாளராக உமர் குல்லும் பேட்டிங் பயிற்சியாளராக முகமது யூசுஃப்பும் செயல்படுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Leave A Comment