• Login / Register
  • விளையாட்டு

    மத்தியூஸ் சதம்; நியூசிலாந்துக்கு வெற்றி இலக்கு 285!

    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2வது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 302 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

    சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (12) நிறைவுபெற்றது.

    2வது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 105.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.


    .லங்கை அணி சார்பில் அபாரமாக துடுபெடுத்தாடிய ஏஞ்சலோ மத்தியூஸ் 115 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இது அவரது 14வது டெஸ்ட் சதமாகும்.


    தனஞ்செய டீ சில்வா ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 42 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

    பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் ரிக்நெர் 4, ஹென்ரி 3, சௌதே 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

    இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு 285 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ஓட்டங்களை பெற்றுள்ளது.


    போட்டியின் இறுதி நாளான தொடர்ந்து துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து அணி வெற்றிபெற 257 ஓட்டங்களை பெறவேண்டியள்ளது.

    இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்களையும், நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 373 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment