இந்திய ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்!
இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கிரைக் ஃபுல்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ஹாக்கி இந்தியாவின் தலைவர் திலீப் திர்கி அறிவித்துள்ளார்.
48 வயது ஃபுல்டன், 25 வருடங்களாகப் பயிற்சியாளர் பணியில் அனுபவம் பெற்றவர். அயர்லாந்து அணியின் பயிற்சியாளராக 2014 முதல் 2018 வரை ஃபுல்டன் பணியாற்றியபோது அந்த அணி கடந்த 100 வருடங்களில் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியடைந்தது. இதனால் 2015-ல் எஃப்.ஐ.எச். சிறந்த பயிற்சியாளர் விருதை அவர் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பெல்ஜியம் அணி தங்கம் வென்றபோது அந்த அணியின் உதவிப் பயிற்சியாளராக ஃபுல்டன் பணியாற்றியுள்ளார். அதேபோல 2018-ல் பெல்ஜியம் அணி உலகக் கோப்பையை வென்றபோதும் பயிற்சியாளர் குழுவில் ஃபுல்டன் இடம்பெற்றிருந்தார். ஒரு வீரராக தென்னாப்பிரிக்க அணிக்காக 195 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
Leave A Comment