• Login / Register
  • விளையாட்டு

    உலக சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர் சாதனை!

    ப்ரோ செஸ் லீக் போட்டியில்  செஸ் உலக சாம்பியன் கார்ல்சனை இந்திய வீரர் விதித் குஜ்ராதி  தோற்கடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்தியன் யோகிஸ் அணியைச் சேர்ந்த விதித் குஜ்ராதி. இணைய வழியில் நடைபெற்ற ஆட்டத்தில் 58-வது நகர்த்தலில் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டார் கனடா செஸ்ப்ராஸ் அணியைச் சேர்ந்த கார்ல்சன். இதன்மூலம் முதல்முறையாக கார்ல்சனை வீழ்த்தியுள்ளார் 28 வயது விதித் குஜ்ராதி. மேலும் கார்ல்சனை வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார். 

    அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியன் யோகிஸ் அணி, கனடா அணியை வீழ்த்தியது. 

    Leave A Comment