மற்றுமொரு செஸ் கிராண்ட்மாஸ்டர் : அசத்தும் தமிழகம்
இந்தியாவில் அதிக செஸ் கிராண்ட்மாஸ்டர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் இருந்துவரும் நிலையில் மேலும் ஒரு தமிழக வீரர் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 25 வயது விக்னேஷ் இந்தியாவின் 80 ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்தியாவிலுள்ள 80 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 29 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்களிப்பு மேலும் அதிகமாகியுள்ளது.
1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த். அவரை முன்னுதாரணமாகக் கொண்டு இன்றுவரை ஏராளமான கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகி வருகிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 13 மாநிலங்களில் இருந்து மட்டுமே செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் கிடைத்துள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக மஹாராஷ்டிரமும் மேற்கு வங்கமும் அதிக கிராண்ட்மாஸ்டர்களைத் தந்துள்ளன.
Leave A Comment