• Login / Register
  • விளையாட்டு

    இரண்டு கோல் அடித்து அசத்திய ரொனால்டோ - வெற்றிபெற்ற மெஸ்ஸி

    உலகக்கிண்ண போட்டிக்கு பின்னர் ரொனால்டோ - மெஸ்ஸி மோதிக்கொள்ளும் கால்பந்தாட்ட போட்டி இடம்பெற்றிருந்தது இதில் மெஸ்ஸி இடம்பெற்றிருந்த  அணி வெற்றிபெற்றுள்ளது.

    பாரிஸ் செயின் ஜெர்மன் (பி.எஸ்.ஜி.) -  ரியாத் சீசன் (அல் நசார் லெவன்) அணிகளுக்கு இடையிலான கண்காட்சி ஆட்டம் சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் நடைபெற்றது.

     பிஎஸ்ஜி அணியில் மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்பே இடம்பெற்றார்கள். ரியாத் சீசன் அணிக்கு ரொனால்டோ தலைமை தாங்கினார். இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி அணி 5-4 என வென்றது. 

    மெஸ்ஸி, ரொனால்டோ ஆகிய இருவரும் கோல் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். மெஸ்ஸி ஒரு கோலும் ரொனால்டோ இரு கோல்களும் அடித்தார்கள். இருவரும் ஒரு மணி நேரம் களத்தில் விளையாடினார்கள். 

    வரும் ஞாயிறன்று சவுதி ப்ரோ லீக் போட்டியில் அல் நசார் அணிக்காக அறிமுகம் ஆகவுள்ளார் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment