• Login / Register
  • செய்திகள்

    ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

    ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படலாம் என அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்த நிலநடுக்கத்தால் அபாயகரமான சுனாமி அலைகள் ரஷ்யாவின் கடற்கரையை மையமாக வைத்து 300 கி.மீட்டர் தொலைவில் ஏற்படலாம் என எச்சரித்திருந்தது.

    பின்னர் அது சுனாமி நிலை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக ரஷ்ய அவசரகால அமைச்சகம் சுனாமி எச்சரிக்கையை வெளியிடவில்லை என்று TASS தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் பகுதியில் ஏற்பட்டுள்ளதுடன், முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    Leave A Comment