• Login / Register
  • செய்திகள்

    தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது – உச்சநீதிமன்றம் அதிரடி

    இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

    இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்க மத்திய அரசு தடுப்பூசி முகாம்கள் அமைத்து அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வந்தது.

    தற்போது, கொரோனா தொற்று அதிகரிப்பதால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவருக்கும் மீண்டும் செலுத்தும் பணிகள் தொடங்கின.

    இந்த நிலையில், தமிழகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார்.


    இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்பு சாசனப் பிரிவு 21ன் கீழ், எந்த ஒரு நபரையும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவு பிறத்துள்ளது.

    மேலும், கொரோனா விதிமுறைகளில், சில நிபந்தனைகளை உருவாக்கி அதன் கொள்கைகளை வகுக்க மாநில அரசுக்கு அதிகாரத்தையும் வழங்கி உள்ளது.

    தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை நீக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக ஆணை பிறப்பித்துள்ளது. 

    இந்த நிலையில், தமிழகத்தில் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 1.7 கோடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


    Leave A Comment