• Login / Register
  • செய்திகள்

    நேபாளம் விமானம் விபத்து: 14 பேர் உடல் மீட்பு

    நேபாளத்தில் தனியாருக்குச் சொந்தமான டாரா ஏர் 9 என்ஏஇடி என்ற இரட்டை இயந்திர விமானம் ஒன்று சுற்றுலா நகரமான பொக்காராவில் இருந்து நேற்று புறப்பட்டது.

    விமானத்தில் 4 இந்தியர்கள் உள்பட 22 பேர் இருந்தனர். அவர்களில் 3 பேர் ஜப்பான் நாட்டுச் சுற்றுலாப் பயணிகள்.

    விமானம் தலைநகர் காட்மண்டுவில் இருந்து 80 கிலோ மீட்டர் வடமேற்கே உள்ள ஜோன்சம் நகரம் நோக்கிப்புறப்பட்டது.

    விமானம் நேற்று மஸ்டங் மாவட்டம் ஜோன்சம் நகரம் அருகே தென்பட்ட நிலையில் விமானம் திடீரென திசைமாறி தவளகிரி நோக்கிப் பறந்து சென்றுள்ளது.

    அதன்பின் விமானத்துடனான தொடர்பு அறுந்துவிட்டது. விமானத்தைத் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

    இதனிடையே, விமானம் முஸ்தாங் மாவட்டம் கோவாங் பகுதியில் விழுந்து நொறுங்கியது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    14, 500 அடி உயரத்தில் விபத்து நடந்துள்ளதால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன.

    இந்த நிலையில், இதுவரை 14 பேர்களின் உடல்கள், தற்போது மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை மீட்கும் பணியில் புதிதாக 15 பேர் கொண்ட மற்றொரு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


    Leave A Comment