• Login / Register
  • செய்திகள்

    'மக்கள் நலனுக்காக புதிய யுக்திகளை கொண்டு வருக': முதல்வர் ஸ்டாலின்

    திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்த நிலையில், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசுத் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

    இந்த ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

    இரண்டாம் நாளான இன்று 19 துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், உரையாற்றினார்.

    அந்த உரையில், ‘பொதுமக்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்கும் வகையில் நிர்வாம் இருக்க வேண்டும். அரசின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு துறையும் செயல்பட வேண்டும்.

    படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நான் முதல்வன் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி, வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்.

    அரசின் அறிவிப்புகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.

    பொதுமக்களுக்கு பயனளிக்கும் புதிய யுக்திகள் எங்கிருந்தாலும், அதை நம் மாநிலத்திற்கு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்’ 

    இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


    Leave A Comment