• Login / Register
  • செய்திகள்

    பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: காயத்ரி ரகுராம் அதிரடி நீக்கம்

    பாரதிய ஜனதா கட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அக்கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் மாற்றப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், அணிகள், மற்றும் அதன் பிரிவுகளின் தலைவர்கள் அடங்கிய புதிய பட்டியலை, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

    அதில், மாநில துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு சட்டமன்ற குழுத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர்களாக நாராயணன் திருப்பதி, கே.எஸ்.நாகேந்திரன், ஏ.ஜி.சம்பத், மற்றும் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    பாஜக மாநில செயலர்களாக கராத்தே தியாகராஜன், வினோஜ்.பி. செல்வம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல், பா.ஜ.க மாநில மகளிர் அணி தலைவராக உமாரதி, இளைஞரணித் தலைவராக ரமேஷ் சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மாநில மீனவப் பிரிவுத் தலைவராக எம்.சி.முனுசாமியும், சமூக ஊடகப் பிரிவு தலைவராக சி.டி.நிர்மல்குமார் மற்றும் ஊடகப் பிரிவு தலைவராக ரெங்கநாயகலுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


    கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது பதவியில் பெப்சி சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    முன்னதாக, நடிகை காயத்ரி ரகுராம், தனது அணி நிர்வாகிகள் சிலரை, மாநிலத் தலைவர் அனுமதியின்றி நீக்கியது சர்ச்சையை கிளப்பியது. இருந்தும் மாநில தலைவர் அண்ணாமலை தன்னை நீக்கமாட்டார் என காயத்ரி ரகுராம் நம்பிக்கைத் தெரிவித்த நிலையில் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

     

    Leave A Comment