• Login / Register
  • செய்திகள்

    தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு பூரண ஆதரவு!

    தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

    திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் இன்று (07) சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திபின்போது சம்மேளன நிர்வாகிகள் இதனை தெரிவித்தனர்.

    இதன்போது, திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த யதீந்திரா உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

    இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

    2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு சார்பில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு எமது பூரண ஆதரவினை வழங்குகின்றோம். தமிழ் மக்களும் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக சங்கு சின்னத்தில் வாக்களித்து எங்களின் ஒற்றுமையை காட்ட வேண்டும்.

    தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படாதுள்ளது என்பதனை சர்வதேச சமூகத்திற்கும் பெரும்பான்மை சிங்கள அரசியல் தரப்பினருக்கும் உணர்த்தும் வகையில் தமிழ் மக்களின் தீர்ப்பு அமையவேண்டும் என்ற அடிப்படையில் சங்கு சின்னத்திற்கு ஆதரவு வழங்குவது என்ற தீர்மானத்தை நாம் எடுத்துள்ளோம் என தெரிவித்தனர்.

    இதன்போது, திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த யதீந்திரா உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

    Leave A Comment