• Login / Register
  • செய்திகள்

    உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்: திருச்சி திமுகவினர் தீர்மானம்

    திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில், வருகின்ற ஜூன் 3ஆம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99 ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது எனவும், கழக ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதனையடுத்து, கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


     

    இதனிடையே, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

    Leave A Comment