• Login / Register
  • செய்திகள்

    அரசு பேருந்தில் 5 வயது வரை கட்டணம் இல்லை: தமிழக அரசு

    தமிழகத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இனி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், ‘தமிழகத்தில் அரசு பேருந்துகளில் தற்போது மூன்று வயது குழந்தைகள் கட்டணம் இன்றி பயணித்து வருகின்றனர்.

    மூன்று வயது முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அரைக் கட்டணத்தை செலுத்தி பயணம் செய்து கொள்ளும் நடைமுறை இருந்து வந்தது.

    இனி, தமிழகத்தில் 5 வயது குழந்தைகள் வரை அரசுப் பேருந்துகளில் பயணம் செய்து கொள்ளலாம். இது அனைத்து விதமான அரசுப் பேருந்துகளுக்கும் பொருந்தும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், திருநங்கைகள் அனைவரும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment