• Login / Register
  • செய்திகள்

    குமரியை நெருங்கும் தாழமுக்கம்; 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை வழியாக குமரிக் கடற்பகுதியை ஒட்டியதாக நகரும் என எதிவுகூறப்பட்டுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட 19 மாவட்டகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கோவை, திருநெல்வேலி, தஞ்சை, திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 24-12-2022 23.20 மணி அளவில் நாகையில் இருந்து சுமாா் 330 கி.மீ. கிழக்கே தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. 

    இது சற்றே வலுகுறைந்து மேற்கு-தென்மேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை (டிச. 26) இலங்கை வழியாக குமரிக்கடல், அதையொட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    Leave A Comment