• Login / Register
  • செய்திகள்

    மாவீரர்களை வணங்கி கிளிநொச்சியில் தொடரும் பரப்புரை!

    தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் சானதிபதி தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் 'நமக்காக நாம்' பிரசார பயணம் கிளிநொச்சி மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    கிளிநொச்சி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் பரப்புரை நடவடிக்கைகளுக்காக சென்ற தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு இத்தாவில் பகுதியில் வைத்து சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்மு பளை நகருக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

    தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் 'நமக்காக நாம்' பிரசார பயணத்தின் ஐந்தாவது நாளhன நேற்று (28) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிக்கப்பட்டன.

    கரடிப்போக்கு சந்தியில் இருந்து காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி உருத்திரபுரம், பூநகரி, முழங்காவில், ஜெயபுரம், வன்னேரிக்குளம், அக்கராயன் குளம், முறிப்பு, கோணாவில் ஊடாக பயணித்து டிப்போ சந்தியில் நிறைவடைந்தது.

    குறித்த பிரசார வழித்தடத்தில் பொதுமக்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகள் சிறப்பான வரவேற்பை வழங்கி உற்சாகப்படுத்தியிருந்தனர்.

    கிளிநொச்சி மாவட்ட தேர்தல் பரப்புரை நடவடிக்கையின் போது நேற்றைய தினம் முழங்காவில் மற்றும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு சென்று அங்கு விதைக்கப்பட்டிருக்கும் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



    Leave A Comment