• Login / Register
  • செய்திகள்

    ஆரம்பமானது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று ஆரம்பமாகிறது. 9.55 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.

    சென்னையில் மட்டும் 552 பள்ளிகளைச் சேர்ந்த 47 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத இருக்கிறார்கள்.

    இதற்காக, தமிழகம் முழுவதும் மொத்தம் 3 ஆயிரத்து 936 தேர்வு மையங்களும், தனித் தேர்வர்களுக்கு 147 மையங்களும், சிறைக்கைதிகளுக்கு 9 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன

    தேர்வறை கண்காணிப்பாளர்களாக 51 ஆயிரம் ஆசிரியர்கள், பறக்கும் படையில் 4 ஆயிரத்து 291 ஆசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். 308 மையங்களில் இருந்து வினாத்தாள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. முதல் நாளான இன்று மொழிப்பாடத் தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1.15 மணிவரை நடைபெற உள்ளது.

    பத்தாம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் இந்த மாதம் 30ஆம்தேதியுடன் முடிவடைகின்றன. ஜூன் 17ஆம்தேதி தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    Leave A Comment