• Login / Register
  • செய்திகள்

    இலங்கையில் மே 9 வன்முறை - 1,348 பேர் கைது

    இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில், பொருளாதார வீழ்ச்சி மற்றும் அரசியல் அழுத்தம் காரணமாக கடந்த 9 ஆம் தேதி மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார்.

    இதனையடுத்து, மகிந்த ராஜபக்சேவின் ஆதராவாளர்கள், அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது வன்முறையில் ஈடுபட்டனர்.

    இந்த கலவரம் மற்றும் வன்முறையில் 9 பேர் பலியாகினர். மேலும், 400 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

    இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க, கடந்த 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

    இதனிடையே, இலங்கையில் கடந்த மே 9 ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட கலவரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், இலங்கை காவல் கண்காணிப்பாளரின் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது, கடந்த மே 9 மற்றும் 10 ஆகிய இரண்டு தினங்களில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக, இதுவரை 1,348 கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இலங்கையில் கடந்த மே 9 மற்றும் 10 ஆகிய இரண்டு தினங்களில், அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது.

    இந்த தாக்குதல் நடத்தியது தொடர்பாக 484 புகைப்படங்கள் மற்றும் 73 வீடியோக்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது.

    இதுவரை 669 தகவல்கள் கிடைத்துள்ளன.  அவற்றில் 31 தகவல்கள், சேதங்கள் தொடர்பான ஆதாரங்கள்.

    இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறு தகவல்களை வழங்கியமைக்காக பொதுமக்களுக்கு நன்றி’

    இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.


    Leave A Comment