• Login / Register
  • செய்திகள்

    குடும்ப கொள்ளை ஆட்சி : சந்திரசேகர் ராவை சாடிய பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா மாநிலத்துக்கு வருகை தரும்போதெல்லாம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவரை வரவேற்க வருவதில்லை.

    கடந்தமுறை ராமானுஜரின் சமத்துவச் சிலையை நிறுவ மோடி வந்திருந்தபோது  லேசான காய்ச்சல் என்றுகாரணம் கூறி முதல்வர் சந்திரசேகர ராவ் மோடியை வரவேற்க வரவில்லை. ஆளுநர் தமிழிசையும், அமைச்சர் சீனிவாஸ் யாதவ் ஆகிய இருவர் மட்டுமே பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    இந்தநிலையில் இன்று இரண்டாவது முறையாக பிரதமர் மோடி ஐதராபாத்துக்கு வருகை தந்த நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பெங்களூருவுக்கு பயணமாகி விட்டார். அங்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுடன் அவர் சந்திப்பு நிகழ்த்த இருக்கிறார்.

    இந்நிலையில்  ஐதராபாத் வந்த பிரதமர் மோடி அங்கு  நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, முதல்வர் சந்திரசேகர ராவை அவர் மறைமுகமாகத் தாக்கிப்பேசினார்.

    ‘தெலங்கானா அரசு ஊழலில் ஊறித்திளைக்கிறது. இங்குள்ள ஆட்சியாளர்கள் அவர்களது வங்கிக் கணக்கை நிரப்புவதிலேயே குறியாக இருக்கின்றனர்.

    நாட்டை கொள்ளை அடிப்பதில் ஒரு குடும்பத்தினர் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். அந்தக் குடும்பத்தின் கையில் ஆட்சி நிர்வாகம் சிக்கித்தவிக்கிறது. கொள்ளை அடிப்பதற்காகவே அவர்கள் அரசியல் கட்சி நடத்துகிறார்கள்’

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார். ஐதராபாத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வர இருக்கிறார்.

    Leave A Comment